பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

உலக வரலாற்றில்


நாட்டையும், மக்களையும் மறந்து உலக நினைவே இல்லாமல் போதை மன்னனாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

இந்த மோசமான நிலையில் தனது நாடு நலிந்து உழன்று கொண்டிருக்கும் நேரத்திலேதான் மாவீரன் நாசர் என்பவர் தோன்றி நாட்டிலே புரட்சியை உருவாக்கினார்.

மது மங்கை மன்னனின் அடிமை இருளிலே இருண்டு கொண்டிருந்த எகிப்து நாட்டை, ஒளிவானமாக்கும் எழு ஞாயிறாகத் தோன்றி மக்கள் மனதிலே சுதந்திர ஒளியைப் பரப்பியவர் மாவீரர் நாசர்!

எகிப்திய விடுதலை வீரர் நாசர், கி.பி.1918-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் ஒர் அஞ்சலக ஊழியரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை கற்றுத்தேறிய நாசர் திடீரென கல்லூரியின் இறுதி ஆண்டுப் படிப்பின்போது, தனது நாட்டின் படுமோசமான சீரழிவைக் கண்டு சிந்தித்து அரசியல் துறையிலே திடீரென்று புகுந்தார்!

எகிப்து நாட்டை அடிமைப்படுத்திச் சுரண்டும் பிரிட்டிஷ்காரர்களது சுரண்டலை எதிர்த்துப் போராட்டங்களிலே ஈடுபட்டார். அதுபோலவே, எகிப்து நாட்டின் பொருளாதார வளங்களைச் சூறையாடி வந்த வல்லரசு நாடுகளையும் எதிர்த்துப் போராடினார். அதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு மட்டுமன்று, வல்லரசு நாடுகளின்