பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

உலக வரலாற்றில்



சோவியத் ரஷ்யாவில் என்னென்ன திட்டங்கள் அந்த நாட்டை முன்னேற்றுவிக்கப் பயன்பட்டனவோ, அதே திட்டங்களைக் கொண்டு தனது தாய் நாட்டையும் முன்னேற்றினார். மிகக் குறுகிய காலத்தில் யூகோ நாடு புயல்வேக முன்னேற்றங்களுடன் உலகில் தலை நிமிர்ந்து நின்றது.

யூகோஸ்லேவியாவைத் தொடக்கக்காலத்தில் சோவியத் ரஷ்யாவின் ஓர் அங்கம் போலவே எண்ணிச் செயல்படுத்தினார் டிட்டோ. அப்போது ரஷ்யாவில் ஸ்டாலின் எப்படியெல்லாம் ரஷ்யாவை முன்னேற்ற அரும்பாடு பட்டாரோ, அந்த உழைப்புக்களை எல்லாம் டிட்டோ மதித்தார் மரியாதை கொடுத்துப் பின்பற்றினார்.

ஆனால், போகப் போக சோவியத் யூனியன், தனது தாய் நாடான யூகோஸ்லேவியாவைப் புறக்கணித்து, அடிமை கொள்ள நினைக்கிறதோ என்ற ஓர் அச்சமும் டிட்டோவுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால், சோவியத் யூனியன் ஆட்சியை லட்சியம் செய்யாமல், தனது மனப்போக்கோடு. தனது தாய் நாட்டை முற்போக்குச் சிந்தனைகளோடு ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.

டிட்டோவின் இந்தத் தன்னிச்சைப் போக்கு ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஸ்டாலின் டிட்டோவைத் துரோகி என்று வசை பாடினார்! சோவியத்-