பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

127


அரசுப் பத்திரிகையான ‘ப்ராவ்தா’ டிட்டோவை முதலாளிகளின் கைக்கூலி என்று கடுமையாகத் தாக்கி எழுதியது. பிறகு யூகோஸ்லேவியா நாட்டை சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் அகிலத்தில் இருந்து பிரித்துவிட்டது.

ரஷ்யாவைச் சார்ந்து வாழும் கம்யூனிஸ்ட் நாடுகள், டிட்டோவிற்கு எல்லையற்ற தொல்லைகளையும், தீராத கஷ்டங்களையும் பல குறுக்கு வழிகளிலே நயவஞ்சகமாகச் செய்து டிட்டோ ஆட்சியைக் கவிழ்க்கச் சதிசெய்தன.

அந்த எதிர்ப்புக்களை எல்லாம் மார்ஷல் டிட்டோ என்ற தன்மானச் சிங்கம் தவிடுபொடியாக்கிவிட்டது.தனது யூகோ நாட்டை தனி நாடாக்கி தன்நிகரில்லா ஏறு நடைப்போட்டார் டிட்டோ. எந்ந அரசியல் சூழ்ச்சிகளாலும் டிட்டோவைக் கவிழ்க்க முடியாது என்ற சவால் விடுத்து, ஸ்டாலினின் எதிர்ப்புத் தொல்லைகளை, அரசியல் சதிகளை வீழ்த்திக் காட்டிவிட்டார்.

அதற்குப் பிறகு, ரஷ்யாவே டிட்டோவைத் தட்டிக் கொடுத்து, தனது நாட்டுடன் கூட்டுறவை வைத்துக்கொள்ள இடமளித்தது என்றாலும், டிட்டோ அதற்கெல்லாம் ராஜதந்திரமாக நடந்துகொண்டு தனது தாய்நாட்டை சுதந்திர நாடாக வாழவைத்தார்!