பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

13


முஸ்லீம்களைப்போல வேடமிட்டிருந்தார்கள். ஜியாஉதின் என்ற பெயரை போஸ் வைத்துக்கொண்டார்.இரகமத்கான் என்ற பெயரை பகத்ராமுக்கு சூட்டினார்.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை நோக்கி இருவரும் நடந்து சென்றார்கள். வழியில் ஒரு லாரியை பிடித்துக்கொண்டு மூட்டையோடு மூட்டையாக கிடந்து காபூல் நகர்போய் சேர்ந்தார்கள்.

காபூலில் பேசப்படும் பாரசீக மொழி இரண்டு பேருக்கும் தெரியாததால் தங்குமிடம் எங்கே என்று விசாரிக்க முடியவில்லை. அதனால் பல தொல்லைகளை ஏற்று ஒரு சத்திரத்தில் குதிரை லாயத்தில், குதிரைகளுக்கு மத்தியில் தங்க இடம் கிடைத்தது. துர்நாற்றம் வீசும் அந்த இடத்திலே அவர்கள் உறங்கினார்கள்.

அந்த இடத்திலும் பத்திரமாக இருக்க முடியவில்லை. காவலர் தொல்லைகள் அதிகரித்தன. அங்கிருந்து இரஷ்யாவிற்குத் தப்பிச் சென்று விடலாமா என்று யோசித்தனர்.

அகமத்கான் என்ற பெயரிலே உள்ள பகத்ராமின் பழைய நண்பர் ஒருவர் காபூலில் தங்கியிருந்தது நினைவிற்கு வந்தது. பகத்ராம் அவரிடம் சென்று தங்க இடம் கேட்டார். போஸ் மாறுவேடத்தில் மறுபெயரில் காபூல் வந்திருப்பது கண்டு உத்தம் சந்த் என்ற அந்த பகத்ராமின் நண்பர் வியப்பு அடைந்தார். என்றாலும் திகைப்போ பரபரப்போ ஏதும்