பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

17



கிழக்காசியப் பகுதிகளில் வாழ்ந்த இந்தியக் குடிமக்களும் சுதந்திர வீரப் படையினரும் சுபாஷ் சந்திரபோஸை ‘நேதாஜி’ என அழைத்துப் பெருமைப்படுத்தினார்கள். அப்பகுதி இந்தியப் பெருமக்கள், விடுதலைப் படை உதவிக்கென்று பெரும் பொருளை வாரிவாரித்தந்தனர்.

நேதாஜி விடுதலைப் படையில் பல்லாயிரக்கணக்கில் இந்தியர்கள் இராணுவத்திலும் சேர்ந்தனர். ஆண்கள் மட்டுமன்றி, அந்தப் பகுதியில் பெண் மக்களும் நேதாஜியின் தலைமையை ஏற்று விடுதலை முழக்கமிட்டு வீரிட்டு எழுந்தனர்.

இராணுவப் பயிற்சி பெற்று வீராங்கனையாக ஆர்ப்பரித்தனர். பெண்களின் படைக்கு ஜான்சி இராணி பெயர் சூட்டப்பட்டது. கேப்டன் இலட்சுமி அதன் தலைவரானார். பாரத நாட்டின் காங்கிரஸ் பேரரவை தனது கட்சிக் கொடியாக அமைத்து இருந்த இராட்டைச் சின்னம் பொறித்த மூவண்ணக் கொடியே நேதாஜியின் விடுதலைக் கொடியாகப் பட்டொளி வீசிப் பறந்தது.

நேதாஜி அமைத்த சுதந்திர அரசாங்கத்தை ஒன்பது நாடுகள் அங்கீகரித்தனர். அப்போது, அந்தமான், நிக்கோபார் தீவுகளை ஜப்பான் பிடித்து அந்தத் தீவுகளை நேதாஜியின் பொறுப்பில் விட்டிருந்தது.

கிழக்காசிய நாடுகளில் வசித்த முப்பது லட்சத்திற்கு அதிகமான இந்திய மக்கள் சுதந்திர அரசாங்கத்தின் குடிமக்களானார்கள். நாணயச் செலாவணிக்கு வங்கி