பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

25


ஆக்கிவிட்டால், தொழிலாளிகள் இப்போது உழைப்பதைவிட, மிக ஆர்வமாக, ஊக்கமாக உழைப்பார்கள். நாட்டில் உற்பத்தி பெருகி, எங்கும் செல்வமும் செழிப்பும், நிலவும். தொழிலாளர் ஏவுவாரின்றி இயங்கும் இயந்திரம் போல, பிறர் தூண்டுதல் இல்லாமலே வியக்கத்தக்க முறையில் உழைத்து உற்பத்தியைப் பெருக்கி நாட்டை, செல்வ நாடாகச் செய்வர். உலகம் முழுவதும் இந்தக் கொள்கை பரவும்போது ஒழுங்கும், அமைதியும் தாமாகவே நிலவும். அந்த நிலையை அடைவதற்குப் புரட்சியே ஒரு கருவியாக உள்ளது என்பது மார்க்ஸ் முடிவு.

ஆகவே, இவர் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் கருதாமல் அதனை வலியுறுத்துகிறார். தன்னலம், விருப்பு, வெறுப்புயின்றி நடுநிலையில் இருந்து ஆராய்பவர்கள் இந்த முடிவுக்கே வந்து தீர்வார்கள் என்பது மார்க்ஸின் துணிவு. மார்க்ஸின் கொள்கை சோசலிசம் என்பதிலிருந்து சற்று மாறுபட்டதாகும். சோசலிசமும் தனியுரிமைகளை தேசிய மயமாக்க விரும்புகிறது. ஆனால் அது மிதமான போக்கில் மேற்கொள்கிறது. மார்க்ஸ் கொள்கை மிகத்தீவிரமாக புரட்சி முறையைக் கூறுகின்றது. அது, விஞ்ஞான சோசலிசம் அல்லது கம்யூனிசம் எனப்படும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உழைப்பிற்கேற்றவாறு பலனை அளிக்க வேண்டும் என்று அது கூறுகிறது அது வாயிலாக மனிதனை மிகுதியாக உழைக்கும்-