பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

உலக வரலாற்றில்


எனக்கு உயிர் நாடி போன்றது. இதைப் பாழ்படுத்தாமல் என்னுடைய மனைவியிடம் கொண்டுபோய் கொடுப்பீரா என்று மனமுருகிக் கேட்டார்.

கவலைப்படாதீர்கள். என்னுடைய உயிரை விட அதிக அக்கறையுடன் தங்கள் கட்டளைகளை, நிறைவேற்றியே தீருவேன் என்றான் காவலன். தன்னுடைய வாக்குறுதிப்படி பியூசிக்கின் மனைவியிடம் கொண்டு சேர்த்தான்.

பியூஸிக்கின் மனைவி அகஸ்டினா பியூஸிக் அந்த வரலாற்றை 1945-ம் ஆண்டு தூக்குமேடைக் குறிப்புகள் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். இந்த நூல் உலகப் பெரும் புகழ் பெற்றது. பியூஸிக் எழுதிய கடைசி நூல் என்றாலும், அதில் தனது சிறை வாழ்க்கையின் 311 நாட்கள் அந்த புத்தகத்தில் விவரமாக எழுதப்பட்டிருந்தன. அந்தக் காலத்தில், அந்த நேரத்தில் இப்படி பட்ட ஓர் உணர்ச்சியைத் தூண்டும் சிறை இலக்கியம், அன்று வரை தோன்றியதே இல்லை என்று உலக இலக்கிய மேதைகள் அந்த நூலைப் போற்றி புகழ்ந்துள்ளார்கள்.

உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஆல் ரிஜட் அந்த நூலைப் பற்றிக் கூறும்போது ஒரு வெற்றி வீரரின் உன்னத வீரம் என்று பாராட்டினார்.

மனிதனுடைய உள் உணர்வின் அஞ்சா நெஞ்சத்திற்கு, அது ஒரு சத்திய சாட்சி இலக்கியம். நெஞ்சை உருக்கும் கதை. பொருட் செறிவு, உள்ளடக்கம் நிறைந்த, தெளிவு