பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உலக வரலாற்றில்



1961ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த பொதுத் தேர்தலுக்கு பின் கிரேக்க அரசியலில் நெருக்கடி ஏற்பட்டது. மத்திய ஐக்கிய கட்சி அப்போது இருந்து தீவிரப் பிரச்சாரம் செய்தது. அடுத்த பொதுத் தேர்தல் நேர்மையாக நடைபெறவும், ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நடைபெறவும் அது முழுமூச்சுடன் பாடுபட்டது.

ஆட்சி நிர்வாகப் பொறுப்பை 1950ஆம் ஆண்டு முதல் 52 வரையில் ஏற்றிருந்த அந்தக் கட்சி இரண்டாவது முறையாக இப்போது பதவியை ஏற்றிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவியில் இருந்த பிரதமர் கரமன் லிஸ்ட் ஆட்சியின் கீழ் உருக்குலைந்தது ஜனநாயகம். பிரதமர் பதவிக்கு இன்று வந்துள்ள ஜார்ஜ் பாபன் திரியோவின் கீழ் ஜனநாயகம் மீண்டும் நாட்டில் நிலைபெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. முதுமையடைந்த பிரதமர் ஒய்வு எடுத்து கொண்டு அமைதியாக அமரவேண்டியவர் இப்படி இருந்தும் தம் சொந்த நலனைப் புறக்கணித்துவிட்டு ஜனநாயகத்துக்கு தொண்டாற்ற அவர் முன்வந்தார். ஒர் இளைஞனின் ஆர்வமும் ஊக்கமும் காட்டுகிறார். இவர் தேர்தலில் வாகை சூட இவருக்கு உதவியவை இரண்டு. ஒன்று இவர் சிறந்த சொற்பொழிவாளர். இவருடைய நாவன்மையால் திறமைமிக்க சொல்லாற்றலால், இந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இரண்டாவது இவருக்கு உதவியாக இருந்தது, தொழிலாளர்களிடையே மனம் குமுறி இருந்த வேதனைகளும், விரக்திகளும், வாழ்க்கை நெருக்கடிகளும், அதிருப்தி நிலைகளை