பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

உலக வரலாற்றில்


இவருக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள் பல ஆனாலும், அரசியல் சமுதாய ஜனநாயகத்திற்கு அடிக்கல் போல் தோன்றும் தொழிலாளர் கட்சி மட்டும் இவரை ஆதரிக்கவில்லை. நாட்டின் அரசியலிலே தொழிலாளர் கட்சி என்று ஒன்று இடம்பெறவில்லை. இந்தக் குறைகளுக்கும் பிரதமர் பரிகாரம் கண்டு வெற்றி பெற்றார். மக்கள் அவரை மனமாரப் பாராட்டுகிறார்கள்.



டொமினிகன் சுதந்திர சிற்பி ‘ஜூவான் பாஷ்’

உலக நாடுகளின் சுதந்திர சிற்பிகளில் டொமினிகன் நாட்டில் குடியரசுத்தலைவராகத் திகழ்ந்தவர் ஜூவான் பாஷ். டொமினிகன் குடியரசு இலத்தீன் அமெரிக்காவில் மேற்கு இந்தியத் தீவுகள் ஒன்றில் உள்ளது. இதன் பரப்பளவு ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள பெல்ஜியம் என்ற நாட்டைப் போல இரண்டு மடங்கு பெரியது. ஒரு தீவின் பாதியில் டொமினிகன் மறுபாதியில் ஹெய்டி நாடும் உள்ளன. பின்தங்கியுள்ள நாடு முன்னணியில் இடம் பெற்று வருவதற்கும், மக்களாட்சி ஆட்சி முறை மறுபடி வரப் போராடியதற்கும் டொமினிகன் குடியரசு ஒர் எடுத்துக்காட்டு.

ஒரு சிறிய குடியரசின் ஜனாதிபதியாக இருந்தாலும் ஜூவான் பாஷ் உலகப் புகழ் பெற்றவராக ஆனார்.