பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

உலக வரலாற்றில்


ஜனாதிபதி ஜான்சன் தனது மனப்பூர்வமான அங்கீகாரத்தை அளித்து நீக்ரோ மக்களின் சாசனத்தை சட்ட வடிவமாக்கி நிலைநிறுத்திவிட்டார்.


“வன்முறை வெறி முயற்சி அடிப்படையில் எங்களுடைய கிளர்ச்சி நடைபெற்றிருக்குமானால் உலக மக்களின் அனுதாபத்தை எங்களால் பெற்றிருக்க முடியாது, மாறாக இழந்திருப்போம். வெறும் ஆயுதங்களின் பலம் கொண்டு அந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டிருக்கும் அல்லது நசுக்கப்பட்டிருக்கும்.காந்திய வழியை நான் முழு மனதோடு நம்பினேன், ஏற்றேன். காந்தி நெறிகளிலே இருந்து எள்ளளவும் தவறாமல் கிளர்ச்சிகளை நடத்தி வருகிறேன். வெள்ளையர்களின் வெறித்தனத்திற்கு எதிராக நடத்தப் பட்டிருக்கும் இன உரிமைக் கிளர்ச்சியிலே நல்ல மனம் படைத்த மனித நேயம் கொண்ட ஆங்கிலேயர்கள் ஏராளமாகப் பங்கேற்றார்கள். இந்த அற்புதச் சாதனைக்கு நான் காந்தியத்தைக் கடைபிடித்ததுதான் காரணம். எங்களுடைய கிளர்ச்சி தனிப்பட்ட யார் மீதும் பகை உணர்ச்சியைத் தூண்டவில்லை. அது அநீதிக்கு எதிரான அகிம்சைப் போராட்டமாக அமைந்தது. எனவே நீதியிலே, நேர்மையிலே நம்பிக்கையுடைய யாராலும் எங்களை அலட்சியப்படுத்த முடியவில்லை என்று மார்ட்டின் லூதர் கிங் பெருமிதத்துடன் முழக்கமிட்டார்.”


1964-ம் ஆண்டு, நோபல் சமாதானப் பரிசை கிங் பெற்றார். இந்த உலகப் பரிசு காந்திய தத்துவத்திற்காகக்