பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

உலகவரலாற்றில்


கிங்கிற்கு உலகப் புகழைப் பெற்றுதந்தது. அது முதல் இவர் உலகம் புகழும் தலைவரானார். இந்த வழக்கு நடைபெறும் போது லூதருக்கு வயது என்ன தெரியுமா?26 வயது.

ஆங்கில இனவெறிக் கொள்கை வெள்ளையர் வட்டாரத்தில் இந்த பஸ் வழக்கிற்குப் பிறகு பெருமளவில் பேய்விரித்து ஆடியது. பள்ளிகளில் நீக்ரோ மாணவர்கள் அவமானப் படுத்தப்பட்டார்கள், சிற்றுண்டிச் சாலையில் அடித்து நொருக்கப்பட்டார்கள், பொது இடங்களில் நடமாடவே முடியவில்லை.

28-9-1964-ம் ஆண்டில் மார்ட்டின் லூதர் கிங் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தினார். இரண்டு லட்சம் நீக்ரோ மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். வெள்ளையரும், வெள்ளை இனத்தவர்களான மாணவ, மாணவிகளும் ஆயிரக்கணக்கில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்த ஆர்ப்பாட்டப் பேராட்டம் ஊர்வலம் வாஸிங்டன் நகரில் ஆப்ரகாம்லிங்கன் நினைவுச் சின்னத்தின் அருகே சென்று அடைந்தது. அங்கு நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் லூதர் கிங் ஆற்றிய சொற்பொழிவு உலகப்புகழ் பெற்ற உரிமைப் போர் முழக்கமாகத் திகழ்ந்தது. இந்த மகத்தான அறப்போரின் விளைவாக அமெரிக்க அரசு உடனடியாக அசைந்து கொடுத்து ஆவன செய்ய முன்வந்தது. தலைமுறை தலைமுறையாக நடைமுறையில் இருந்து வந்த இனவெறி மனப்பான்மையைத் தடைசெய்து சிவில் உரிமை மசோதாவாக