பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

உலக வரலாற்றில்



இந்தியத் திருநாட்டு சுதந்திரத்திற்காக காந்தீய வழியில் ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, வ.உ.சிதம்பரனார், காமராஜர், சுப்பிரமணிய சிவா, இராஜாஜி போன்ற எண்ணற்ற தேசப் பக்தர்கள் விடுதலை அறப்போரில் ஈடுபட்டு அளவற்ற தியாகங்கள் செய்துள்ளார்கள். இது, உலகவிடுதலைப் போரில் இதுவரை யாரும் வழிகாட்டியிராத ஒரு புதுமையானபோர் முறையாகும்.

“கொலைவாளினை எடுடா, மிகு கொடியோர் அறவே, குகைவாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா”

என்ற புரட்சி பாடலுக்கேற்ப காந்தியடிகளுக்கு மாறுபட்ட போக்கில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு வேறு வழியில் நாட்டு விடுதலைக்காகப் போராடி தங்களது இன்னுயிரை ஈந்த உலக வீரர்கள் பலர். அவர்களுள் மாஜினி, கரிபால்டீ, லெனின், பர்மிய வீரர் அவுன்சான் போன்றவர்கள் உண்டு.

இவர்கள் ஈடுபட்டுள்ள போர்முறை வன்முறை என்றாலும் இவர்கள் உள்ளத்தில் அவரவர் நாட்டின் விடுதலையும் சமுதாய முன்னேற்றக் கருத்துக்களும் செஞ்சுடர் பரப்பிக் கொண்டிருந்த தேச பக்திக் கனல் ஒன்றுதான்.

இந்த வகையில் காந்தியடிகளைப் பின்பற்றி நடந்தோர்க்கும் மற்றவர்களுக்கும் இடையே வேறுபாடே