பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

71


முஸ்தபாவின் போரை எதிர்த்து நிற்க முடியாமல் புறமுதுகு காட்டி ஓடின.

முஸ்தபா, மக்களுடைய மன நிலையை உணர்ந்து, சுல்தான் ஆட்சிக்கு ஒரு முடிவுகட்டி, முதன் முதலாகத் துருக்கியில் குடியரசு ஆட்சியை நிலைநிறுத்தினார். அதற்கான சட்டதிட்டங்களையும் உருவாக்கினதுடன் அவரே முதல் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்றார்.

முஸ்தபா குடியரசுத் தலைவரானதும், நாட்டின் பழைய நிலைகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பல சீர்திருத்தங்களைச் செய்தார்.

முஸ்தபா செய்த சீர்திருத்தங்களை எல்லாம் முஸ்லிம் மதவாதிகள் ஒன்று கூடி எதிர்த்தார்கள். அவர்களது எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல், அவர் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநாட்டினார்.

துருக்கிநாட்டில் பெண்களது வாழ்க்கை படு பயங்கரமாக இருப்பதை முஸ்தபா கண்டார். அடிமைகளாக மதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு, பெண்ணுரிமைச் சுதந்திரங்களை வழங்கினார். அவர் ஆட்சியின் போதுதான் இஸ்லாம் பெண்கள் அணியும் படுதா முறைகளை நீக்கினார். துருக்கி நாட்டுப் பெண்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் புதுமைப் பெண்களாக வாழ்ந்திட விழிப்புணர்ச்சி பெற்றார்கள்.

இது போன்ற பல சீர்திருத்தங்களைத் துருக்கி நாட்டு மக்களது நலவாழ்வுக்காக சட்டத்தின் மூலம் செய்து