பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

73



அந்நாட்டு மக்களது விடுதலை வேட்கையின் உட்பொருள் என்னவென்றால், “பர்மா நாட்டிற்கு நாங்களே எஜமானர்கள் - பிரிட்டிஷ்காரர்கள் அல்ல!” என்ற சுதந்திர வெறிதான் காரணமாகும்!

இவ்வாறு அவர்கள் தங்களைத் தாங்களே ஏன் அவ்வாறு அழைத்துக் கொண்டார்கள்? ஆங்கிலேய வெள்ளையர்களை எங்கு பார்த்தாலும் சரி, அல்லது அவர்களுடன் பேசும் நெருக்கம் பெற்ற நண்பர்களானாலும் சரி, அவர்களைக் கண்டதும் பர்மியர் கூறும் முதல் விடுதலை கீதம், அதாவது ஜெய்ஹிந்த், வந்தே மாதரம், சுயராச்சியம் எமது பிறப்புரிமை என்ற சுதந்திர உரிமை உணர்ச்சியூட்டும் கோஷங்களைப்போல, பர்மியர்களும் ‘தக்கின்’ என்பார்கள் நாங்கள் பர்மாவின் எஜமானர்கள் என்று எடுத்த எடுப்பிலேயே பர்மியர்கள் முழக்கமிட்ட பின்புதான், பிறகு எதையாவது மற்றவர்களுடன் பேசுவார்கள். அதனாலேதான் பர்மியர்கள் தங்களைத் தாங்களே எஜமானர்கள் என்ற சங்கநாத வணக்கம் செய்து கொண்டார்கள்.

பர்மியர்களின் இந்த ஆச்சரியமான போராட்டத்தின் மூலகர்த்தா யார்? அவர்தான் ‘நூ’ என்ற புரட்சி மனம் படைத்த இளைஞராவார். ‘பர்மாவின் எஜமானர் நாங்களே’ என்று அறிவித்துக் கொண்ட அந்த வீரரின் பின்னாலே எண்ணற்ற இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் எனப்படுவோர் விடுதலை முழக்கப்பணிகளைச் செய்து