பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உலக வரலாற்றில்


கொண்டே ஓர் இராணுவ அமைப்பைப் போல இரும்பு நெஞ்சுடன் போராடினார்கள்.

இந்த ‘நூ’ தான் பிறகு ஒரு நாள் பர்மிய மக்கள் அனைவருக்கும் பிரதமரானார் என்பது விடுதலை உணர்வு கொண்ட ‘தக்கின்’ படையினருக்கு வியப்பாகவே விளங்கியது.

இந்த ‘நூ’ என்பவர், 1907-ம் ஆண்டில் பர்மா வியாபாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் சிறுவனாக இருந்தபோதே அவருக்கு இளைஞர் தாதா என்ற ரவுடித்தனப் பட்டமும் கிடைத்துவிட்டது.அவ்வளவு பெரிய போக்கிரியாகப் பேர் பெற்றார். பெற்றோர்கள், நண்பர்கள், உறவுகள் யாருமே இந்த ‘நூ’வை ‘வா’ என்று கூட அழைப்பது இல்லை! இந்த போக்கிரி போனால் போதும் என்று அவருள்ள இடத்திலிருப்போர் பேசுவார்கள்.

பள்ளிப் படிப்பை எப்படியோ முடித்து கல்லூரிப் படிக்கட்டுகளிலேயும் காலடி வைத்துவிட்டார்! என்னவோ அவரது பழைய பழக்க வழக்கங்கள் எல்லாம் மாறி, குறைந்து, கல்வியாளர்களும் பொதுமக்களும் பாராட்டும் அளவிற்குக் கவிதைகளை எழுதித்தள்ளும் ஒரு பாரதியாக மாறிவிட்டார் ‘நூ’

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மறம்பாடி வீரத்தை எழுப்புவார் மக்களுக்கு தனக்குப் பிடிக்காதவர்கள் என்றால் வசைபாடி எழுதுவார், விருப்பமானவர்களானால் அவர்கள் மீது புகழ்மாலை புனைந்து சூட்டுவார்! பர்மா