பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

75


விரோதிகள் எட்டப்பர்களாக விளங்குவோர் என்று எண்ணிவிட்டாரானால், உடன் அந்தத் துரோகிகள் மீது அறம் பாடுவார்!

‘நூ’இவ்வாறு எழுதும் கவிதைகள் நாளடைவில் சுதந்திர வீர முழக்கங்களான கவிதை உணர்வுகளை ஊட்டிடும் புரட்சி மனப்பானமையோடு பர்மா பத்திரிகைகளிலே வெளிவரும்.

1930-ம் ஆண்டின் போது, பாரதியாரைப் போல் விடுதலை விடுதலை என்ற பொருளை வழங்கும் பர்மா மொழியிலே கவிதையைப் பாடியபடியே வீதிவலம் வந்து, ஒரு பொதுமேடையிலே ஏறி, சிங்கநாதம் செய்தார். அந்த சிங்கநாதம் என்ன தெரியுமா?

‘வெள்ளையனே பர்மாவை விட்டு ஒடு! இல்லையென்றால் துரத்துவோம்! என்ற பொருளிலே அன்று அவர் பாடிய அந்த சுதந்திரப் போர் கவிதை, கேட்ட மக்களை வேங்கைகளாக்கியது! சினந்து எழுந்தார்கள் ‘தக்கின்நூ’ ‘எங்கள் எஜமானர் நூ’வே வாழ்க என்றார்கள்.

மேடைகள் மட்டுமா? பத்திரிகைகளிலே பல கட்டுரைகளை எழுதினார் பத்திரிகை ஆசிரியர் ஊ-பா-சோ;நூ வின் நண்பரானார்! பத்திரிகை வெள்ளையர் ஆட்சி மீது வெறுப்பு நெருப்பைக் கொட்டியபடியே தவறாமல் வெளிவந்தது.