பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உலக வரலாற்றில்


வாழும் கரீன்கள் என்ற பிரிவினை வாதிகள் கரீன் இனத்திற்கு தனி நாடு தேவை என்று ‘நூ’ வுக்கு எதிராக கலகம் செய்தார்கள். சீன எல்லை பர்மாவை ஒட்டியிருந்ததால் கம்யூனிஸ்டுகள் தொல்லைகளும் சூழ்ந்தன. இவற்றை ‘நூ’ சாமர்த்தியமாக இரும்புக் கரம் கொண்டு சமாளித்தார்!

அதே நேரத்தில் பர்மிய மக்களின் தேசிய உணர்வுகளை மதித்து அவர்களை ஒற்றுமைப்படுத்தினார்!

கம்யூனிஸ்டுகளின் தொல்லைகளை சூழ்நலைக்கு ஏற்றவாறு சமாளிக்க, புத்தமதத்தைப் பர்மாவிலே பரப்பினார். அதற்காக, புத்தமத மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கினார். கம்யூனிஸ்டுகள் மத விரோதிகள் என்ற காரணத்தை மக்களுக்கு விளக்கிக்காட்டி, கம்யூனிஸ்டுகளின் இரும்புத் திரை ஆட்சியை எதிர்த்து, மக்களின் ஆன்மிகஉணர்வுகளுக்கு மரியாதை தந்தார்.

எட்டாண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பிறகு, ‘நூ’ பெளத்த பிட்சுவாகி துறவு பூண்டார்! மக்களது சேவைக்காக முழுநேரத்துறவியானார்.