பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

91


பட்டிருந்ததால், சிலர்தான் சபைக்கூட்டத்துக்குப் போக முடிந்தது.

அந்த நேரத்தில் ஆங்காங்கே நகரில் பரவலாகக் குழப்பங்கள், கலகங்கள், சண்டைச் சச்சரவுகள் மூண்டன.

மக்கள்-போலீஸ்காரர்களோடும், ராணுவத்தோடும் ஆங்காங்கே ரகசியமாக மோதி பலரைக் கொன்றுக் குவித்தார்கள். பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் வீடுகளுக்கு தீயிடப்பட்டன! எங்கும் நெருப்பு வெடிப்பு; ஜூவாலை அலைகள்; மக்கள் ஓட்டக்கோஷங்கள்! ஒழிக பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி என்ற கோஷங்களை மக்கள் ஆக்ரோஷமாக எழுப்பிக்கொண்டு சுதந்திர வெறியர்களாய் அலைந்தார்கள்.

இந்தக் கிளர்ச்சியின் போது வீழ்ந்த பிணங்களை ஒன்றின்பின் ஒன்றாக, நீளவரிசையில் அடுக்கிப் பார்த்தால், ஏறக்குறைய 650 மைலுக்கும் நீளமாக பிணங்கள் வீழ்ந்துகிடந்தன என்று ஒரு முறை ‘ரீடர்ஷ் டைஜஸ்ட்’ பத்திரிகை எழுதி சோகத்தை வெளியிட்டது. அந்த அளவுக்கு பிணக்களம் போல அயர்லாந்து காணப்பட்டது.

இந்த நேரத்தில்தான், டிவேலரா லிங்கன் சிறையிலே இருந்து அதிசயமாகத் தப்பி ஓடினார். ஆனால், வளர்கின்ற நாட்டுப்பற்று அவரது குரலையே எதிர்நோக்கிக்கொண்டே நின்றது.

தப்பியோடிய டிவேலரா நேராக மான்ஜெஸ்டர் நகருக்குச் சென்று தலைமறைவானார். அவர் தலைமையில் ஏறு