பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விடுதலை வீரர்கள்

95


நினைக்கவில்லை. முழு சுதந்திரம் தவிர வேறொன்றையும் டிவேலரா பொருட்படுத்தவில்லை.

மறுபடியும் உள்நாட்டுச் சண்டை தொடங்கியது; அப்போது டிவேலரா குடியரசுக் கட்சிப் படையில் ஒரு தொண்டராய் சேர்ந்து உழைத்தார். அந்த நேரத்தில் மக்களில் பெரும்பாலோர் அவரைத் தலைவராக ஏற்கவில்லை ஏனென்றால், செயலுக்குக் கொண்டு வரக் கூடாத ஒன்றை அவர் விடாப்பிடியாய்ப் பிடிக்கும் முயலுக்கு மூன்று கால் என்ற பித்துப் பிடித்தவர் என்று அவரைக் குறித்து எண்ணியதால் அவரைத் தலைவராக ஏற்கும் எண்ணம் இல்லாதவராகப் பலர் இருந்தார்கள்.

1916-ஆம் ஆண்டில் அவரைச் சேர்ந்த மனிதர்களே அவரை இகழ்ந்து பேசினாலும், அவரிடம் வைத்த நம்பிக்கையை இழக்கவில்லை. இப்போது, அவரிடம் நம்பிக்கை வைத்திருந்த பலர், அதனை இழந்துவிட்டார்கள். தம்முடைய அரசியல் வாழ்க்கை தாழ்ந்து போவதைப் பற்றி அவர் வருத்தமோ-வேதனையோ படவில்லை.

ஆனால், மக்களுக்குத் தாம் நினைத்தபடி பயன்படவில்லையே என்ற வேதனைதான அவரை மீளா வருத்தத்தில் மூழ்கடித்தது. குடியரசுக் கட்சி, உடன்படிக்கையை எதிர்த்த கட்சி. அது, 1922-ஆம் ஆண்டுத் தேர்தலில் தோல்வி கண்டது. அதற்குச் சில மாதங்கள் கழித்துத்தான் உள்நாட்டுச் சண்டையும், மோதல்களும் தொடங்கின.