பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விஞ்ஞானிகள்

13

படையெடுப்பு

மார்சேல்ஸ் முற்றுகையிட்டான். அவனுடைய கப்பல் ஒன்று கரையோரம் வந்துவிட்டது. ஆர்க்கிமிடீசால் செய்யப்பட்ட பெரிய இயந்திரம் ஒன்று, ஒரு உத்திரத்தைத் தூக்கி அந்த எதிரியின் கப்பல்மேல் வீசி எறிந்து, அதனைக் கடலிலாழ்த்திவிட்டது. அவ்வாறே சில கப்பல்கள் மூழ்கியவுடன், இப்படியே தன் கப்பல்கள் ஒவ்வொன்றாக மூழ்குவதைக் கண்ட தளபதி, கப்பல்கள் மூழ்காதிருக்க வழி செய்யுமாறு கட்டளையிட்டான். அந்த விஞ்ஞானிகள் எட்டு கப்பல்களை ஒரு சேரத் தாங்கும் பெரிய இயந்திரம் ஒன்றைச் செய்து முடித்தார்கள். ‘இனி கவலையில்லை’ என்று இறுமாந்திருந்தான் ரோம் தளபதி. ஆனால், ஆர்க்கிமிடீசின் இயந்திரம் அதையும் ஒரு சாதாரணக் கப்பலைக் கடலுக்குள் அமிழ்த்துவதைப் போலவே அழித்துவிட்டது. என்றாலும், ரோம் தளபதியின் படைகள் நகருக்குள் நுழைந்துவிட்டன. மூன்றாண்டுகள் முற்றுகைக்குப் பிறகு, கடற்கரையோரம் எதைக் கண்டாலும், ஆர்க்கிமிடீஸ் ஏதோ சூழ்ச்சி செய்து வைத்திருக்கக்கூடுமென்று அஞ்சி அஞ்சி நடந்தார்கள்.

இந்த மூன்றாண்டுகளில் எதிரிகள் படைகளுக்கு ஏராளமான இழப்பு. ஆர்கிமிடிசின் அறிவுக்கூர்மையை எதிர்த்து நிற்க முடியாமல் கப்பல்கள் நீரில் மூழ்குவதால், படைவீரர்கள் பல பேர் மூழ்கினர். குதித்துத் தப்பிக் கரையேறினாலும் எதிரியின் கையில்தானே சிக்கவேண்டும், அதைவிட. நீரில் மூழ்கி இறப்பதேமேல் என்ற முடிவோடு மூழ்கும் கப்பலிலேயே இருந்துவிட்டனர். இப்படி ஓராண்டு, இரண்டாண்டல்ல, மூன்றாண்டுகள் அல்லற்பட்டு எப்படியோ நாட்டுக்குள் வந்துவிட்டனர்.

இதையெல்லாம் ஆர்கிமிடிஸ் கரையோரம் உலவிக் கொண்டு பார்த்தவண்ணமிருந்தவர் இனி நமக்குத்தான் வெற்றியென்று வீடு திரும்பினார். அந்த நேரம்தான் படைகள் உள்ளே நுழைந்து விட்டன. வீடு திரும்பியவர்