பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 Φ. 5ύ Φύ. முதல் பல விஞ்ஞானிகள் கொஞ்சங்கொஞ்சமாக அதன் ஆற்றலையும், செய்யும் முறையையும் படிப்படியாக, நிதான மாகச் சங்கிலித்தொடர்பு போல் வளர்த்தனர். பத்திரிக்கை நிருபர்களேயெல்லாம் அழைத்து, 1903 டிசம்பர், 17ம் நாள் முழுவடிவம் பெற்ற ஆகாய விமானத்தை இரண்டு அமெரிக்க சகோதரர்களான வில்பர் என்பவர், மில்வில்பெ இண்டியானு என்ற ஊரிலும், அவருக்குப் பிறகு நான்காண்டுகளுக்கும், அதாவது 1907 ல் டேசன் ஒஹியோ விலும் பிறந்தவர்கள் உலகமக்களை வான் நோக்கச் செய் தனர். பறவைகள் மட்டிலுமே பறந்துகொண்டிருந்த வானில், பறக்க முடியும் என்ற நம்பிக்கையையூட்டிய அந்த உடன் பிறந்தார்க்கு என்றென்றும் உலகம் பாராட்டுத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறது. இருபதாம் நூற்ருண்டில் தொடங்கிய இந்தப் பயணம் இந்த நூற்றண்டு முடிவதற்குள்ளாகவே, நிலவில் காலடி எடுத்து வைக்கும் அளவுக்கு எவ்வளவு வேகமாகப் பரவி இருக்கிறது என்பதை எண்ணும்போது, இந்த விமானப் பயணம் உலகத்தை எவ்வளவு சுருக்கிவிட்டது என்பதையும் காண்கின்ருேம். மூன்று நாட்கள் ரயிலில் பயணம் செய்ய, வேண்டிய 1380 கல் தூரமுள்ள டெல்லியை, இரண்டு மணி நாற்பது நிமிடத்தில் அடைந்து விடுகிருேம். இப்படியே கண்டத்துக்குக் கண்டம் தாவி விட முடிகிறது எனக்கு. வேண்டிய நண்பர் ஒருவர்; பம்பாயிலிருப்பவர். கால சிற்றுண்டிக்குப் பிறகு, விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு. வருவார். அங்கு தன் கடைக்குப் போய் கணக்குகளைப் பார்த்துவிட்டு, பகல் உணவுக்குப் பிறகு, கல்கத்தா செல்வார். அங்கிருக்கும் கணக்குகளைப் பார்த்துவிட்டு சென்னை வருவார். இங்கிருக்கும் வேலைகளைப்பார்த்துவிட்டு மீண்டும் பம்பாய்க்குச் சென்றுவிடுவார். 1903, டிசம்பர் 17க்கு முன் இதை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எல்லா நாடுகளிலும் நேரம் ஒன்ருயிருப்பதில்லை. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இரண்டு மணி அதிகம்.