பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'86 fo-o; 4, உடல் நலம் கெடும்’ என்று பொய்யாக ஒரு சர்டிபிகேட் வாங்கி அதை வைத்துக்கொண்டு இதாலிக்குச் சென்று விட்டார். ஜெர்மன் குடியுரிமையை இழந்தார். ஐன்ஸ்டினின் தந்தையார் இவரை ஏதாவது தொழிலில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதும் பயனில்லாமல் போய்விட்டது. குடும்பம் வறுமையில் வாடிலுைம், அவருக்கு இயற்கைப்பொருள்களின் தன்மைகளை ஆராய்வதில் மனம் அதிகமாக ஈடுபட்டு, அந்த ஆராய்ச்சியிலேயே பொழுதைக் கழித்தார். ஒருவாருக சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நகரப் பள்ளியில் சேர்ந்து, இறுதித் தேர்வு பெற்றபின், ஜூரிச் பல்கலே நுணுக்கப் 'பள்ளியில் சேர்ந்து, ஃபிசிக்ஸ் (இயங்கியல்) நூல்களை நன்ருகக் கற்ருர். அந்தப் பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியாற்ற முயன்ருர்; முடியாமல் போய்விட்டது. நண்பர் ஒருவர் துணையால் பெர்ன் நகரில் உள்ள அறிவியல் பதிவுரிமை நிலையம் ஒன்றில் வேலை கிடைத்தது. விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளே எழுதி, அந்த நிலையத்தில் பதிவு செய்து கொள்வார்கள். அவற்றைப் பதிவு செய்யும் வேலே ஐன்ஸ்டி னுடையது. அந்த வேலையில் இருந்ததால் ஆராய்ச்சிகள் பற்றிய அறிவும் அவற்றை வெளிப்படுத்தும் நுணுக்கமும் அவருக்கு விளங்கியதால் அவரே பல ஆராய்ச்சிகளே வெளி .யிட்டார். அப்போதுதான் அறிவுலகம் அவருடைய மேதைத் தன்மையைப் புரிந்துகொண்டது. ஒவ்வொரு நாட்டுப் பல்கலைக் கழகமும் வேலே தருவதாக அவரை அழைத்தன. உலகின் பல நாடுகளிலிருந்த பெரிய விஞ்ஞானிகளின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. பிரேக் நகரப் பல்கலைக் கழகம் அவருக்குப் பேராசிரியர் வேலே தந்து கெளரவிக்கும் போது, மரபுப்படி மன்னரைக் காணத் தனிப்பட்ட உயர்ந்த ஆட்ை இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டார். அவர் வேலையேற்ற சில நாட்களில் மிலேவர் என்னும் ஸெர்பியப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு ஆல்பர்ட் என்று பெயரிட்டார்.