பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் கவர் கள்வன் சோழவள நாட்டிலே உள்ள பழம்பெருஞ் சிவஸ்தலம் சீகாழி. அங்கே வேத வேள்வித்துறை நிரம்பிய பெரியார் சிவபாத இருதயர். அவருடைய மனைவியார் பகவதியார். இருவருக்கும் இறைவன் திருவருளே உருவாக ஓர் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இறைவன் அருளால் இரண்டு ஆண்டுகள் நிறைந்து மூன்றாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் சிவபாத இருதயர் காலையில் நீராடும் பொருட்டுக் கோயிலைச் சார்ந்த பிரம தீர்த்தத்தை நோக்கிப் புறப்பட்டார். அவருடைய குழந்தை தானும் வருவே னென்று பிடிவாதம் செய்து அழுதான். வேறு வழி இல் லாமல் குழந்தையையும் அழைத்துக்கொண்டு நீராடச் சென்றார் சிவபாத இருதயர். திருக்குளத்தின் கரையிலே குழந்தையை உட்காரவைத்துவிட்டுக் குளத்திற்குள் இறங்கி அவர் நீராடத் தொடங்கினார். மந்திர விதிப்படியே நீராடி னார். அகமருஷண ஸ்நானம் என்பது ஒரு வகை. நீருக் குள்ளே மூழ்கியபடியே சில மந்திரங்களைச் சொல்ல வேண் டும். அவர் அப்படி மூழ்கியிருக்கையில் கரையில் இருந்த குழந்தை தம் தந்தையாரைக் காணாமல் கோயிலின் சிகரத் தைப் பார்த்து, "அம்மா! அப்பா!" என்று அழுதான். அப் போது சீகாழியில் கட்டுமலையின்மேல் கோயில் கொண் டிருக்கும் தோணியப்பர் உமாதேவியாருடன் இடப வாக