பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 உள்ளம் கவர் கள்வன் யாது என்பதை யெல்லாம் உள்ளடக்கி, "என் உள்ளம் கவர் கள்வன், பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்" என்கிறார். பிற்ரை மயக்குபவர் தம்மிடத்திலுள்ள பொருளைக் காட்டியும், குணத்தைக் காட்டியும், செயலைக் காட்டியும் அவர் உள்ளத்தைத் தம் வசமாக்குவது வழக்கம். இங்கே, சம்பந்தக் குழந்தையின் இறைவன் எவற்றைக் காட்டிக் உள்ளத்தைக் கவர்ந்தான்? தோடு உடைய செவியைக் காட்டினான்; தான் ஏறி வந்த விடையைக் காட்டினான்; தூவெண்மதியைக் காட்டி னான்; உடம்பெல்லாம் பூசிய சுடலைப் பொடியைக் காட்டி னான். எல்லாம் வெண்மை நிறம் உடையவை. குழந்தை இறைவன் காட்டிய கோலத்தில் உள்ள மற்றவற்றைப் பின் னாலே நினைத்து நினைத்துப் புகழப் போகிறது; ஆனால் முதல் முதலாக நினைவுக்கு வருபவை இந்த வெண்மை நிறம் பெற்ற பொருள்களே தூய சத்துவ குணத்தை நினைப்பிக்கும் வண்ணத்தை உடையவைகளே அப் பெரு மானுடைய உள்ளத்தை முதல் முதலாகக் கொள்ளை காண்டன. தோட்டை அணிந்த செவியை உடையவனாகி, இடப வாகனத்தின் மேல் ஏறிக்கொண்டு, ஒரு தூய வெள்ளிய மதியைத் திருமுடியிலே சூடி, மயானத்திலே உள்ள சுட்ட வெண்ணீறாகிய பொடியைப் பூசிக்கொண்டு வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் என்று சொல்கிறார் சம்பந்தமூர்த்தி நாயனார்.