10 உள்ளம் கவர் கள்வன் "நம்பா நினக்கோலம் முறையோ எனக்கால நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார் தம்பாவை யர்க்கன்று காதோலை பாலித்த தயவாளர்" (மதுரைக் கலம்பகம்,29). என்ற குமரகுருபர முனிவருடைய வாக்கையும், அதற்கு டாக்டர் ஐயரவர்கள், 'காதோலை மாங்கலியம் போன்ற சிறப்புடையது; அதனைப் பாலித்தலாவது அவர்களுடைய மங்கலம் கெடாமல் நிலவும்படி நிறுத்துதல்' என்று எழுதிய குறிப்புரையையும் இங்கே பொருத்திப் பார்க்க. வேண்டும். நித்திய சுமங்கலையாகிய அம்பிகையின் மங்கலத்துக்கு அறிகுறியாக அப்பெருமாட்டியின் திருச் செவியில் இருப் பது தோடு. அந்த மங்கல அணியைச் சொல்லும் மொழி யும் மங்கல முடையதுதானே? எனவே, உலகத்துக்கு மங்கலம் செய்ய எழுந்த சம்பந்தப் பெருமானது திரு வாக்கு, 'தோடு' என்ற மங்கல மொழியை முதலிலே உடையதாக எழுந்தது என்றே கொள்ள வேண்டும். தேவாரம் வேதம் போன்றது. அதைத் தமிழ் வேதம் என்றே கூறுவர். வட மொழி வேதம் எழுதாக் கிளவி. தமிழ் வேதமாகிய தேவாரம் எழுதும் மறை, வேதத்தைப் போன்ற சிறப்புடைய தேவாரப் பாடல்களில் வேதத்திலுள்ள சாரமான கருத்துக்கள் அமைந்திருக் கின்றன. வேதம் ஓம் என்று பிரணவத்துடன் தொடங்கு கிறது. தமிழ் வேதமாகிய தேவாரம் ஓம் என்று தொடங்க வில்லை. ' ஆயினும் ஓம் என்ற எழுத்தின் பெரும் பகுதி யாகிய ஓ என்ற எழுத்தோடு தொடங்குகிறது.மந்திரத்தை .
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/19
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை