18 உள்ளம் கவர் கள்வன கள்வன் தொழில். இங்கும் சம்பந்தப் பெருமானுடைய உள்ளத்தை அவர் எதிர்பாராமலே கவர்ந்து கொண்டவன் இறைவன். இந்தப் பாடலை முதலாகவுடைய திருப்பதிகத் தில் கடை காப்பு ஒழிந்த பத்துப் பாடல்களிலும் ‘என் உள்ளங் கவர் கள்வன்' என்று பாடுகிறார் தமிழ் விரகர். இவ்வாறு உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் யார்? அவன் பிரமபுரம் மேவிய பெம்மானாகிய இவன் என்று சொல்ல. வருகிறார். பிரமபுரம் என்பது சீகாழிக்கு ஒரு பெயர். பிரமன் இங்கே இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றான். அதனால் இது பிரமபுரம் ஆயிற்று. இந்தச் செய்தியைக் குறிப்பிக் கிறார் ஆளுடைய பிள்ளையார். நல்ல அழகிய இதழ்களை யுடைய தாமரை மலரில் இருக்கிற பிரமதேவன் பிரளய காலத்துக்குப்பிறகு உலகத்தைப் படைக்க எண்ணினான். அப்போது இங்கே வந்து பணிந்து துதித்துப் படைப்புக் குரிய ஆணையைப் பெறவேண்டி நிற்க, அது கண்டு திரு வுளம் மகிழ்ந்த இறைவன் அவனுக்கு அருள் செய்தான். அவ்வாறு அருள்பாலித்த சிறப்பைப் பெற்ற பிரமபுரத்தில் விரும்பி எழுந்தருளி யிருக்கும் பெருமானாகிய இவன்' என்று சொல்கிறார் சம்பந்தர். ஏடுடைய மலரான் முனை நாள்பணிந்து ஏத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே. வெள்ளைப் பொருளை யெல்லாம் நினைத்த குழந்தைப் பிரான் வெள்ளைத் தாமரையை இங்கே நினைத்தார். உலகமெல்லாம் பிரளயத்தால் அழிந்தபோது சீகாழி என்னும் தலம் மாத்திரம் அப் பிரளயத்தில் மூழ்காமல் தோணி போல மிதக்க, அதன்கண் இறைவன் எழுந்தருளி
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/27
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை