24 உள்ளம் கவர் கள்வன் ஆதலின் ஒடுக்கத்தை நோக்கும் போது அவன் தன குப் பின் நிற்கும் பொருள் யாதும் இல்லாத ஈறாக நிற்கி றான்; தோற்றத்தை நோக்கும்போது தனக்கு முன் தோற்றாத பொருள் யாதும் இல்லாத முதலாகவும் நிற்கி றான். அவனை அநாதி என்று சொல்வர் பெரியோர், அவ னுக்கு முன் யாரும் இல்லாமையால். அநந்தன் என்பர், அவனுக்குப் பின் யாரும் இன்மையால். ஆயினும் அவனே யாவற்றையும் தோற்றுவிக்கும் முதல்வனாதலின் ஆதியென் றும், அவனே யாவற்றையும் தன்பால் ஒடுங்கச் செய்யும் ஈறாக நிற்றலின் அந்தம் என்றும் அவனைக் கூறுவர். சிவஞான போதத்தின் முதற் சூத்திரம், 'அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்று கூறுகிறது. எல்லாப் பொருளுக்கும் முடிவாகி இருக்கும் சிவபெருமானே எல்லாப் பொருளுக்கும் முத லாக நிற்கிறான் என்ற இதனை ஞான சம்பந்தப் பிள்ளையார் சொல்கிறார். திருவீழி மிழலைத் தேவாரத்தில் ஒரு பாசுரத்தை, இறைவன் ஈறாகவும் இருக்கிறான்; முதலாகவும் இருக்கி றான்' என்று தொடங்குகிறார். பாசுரம் முழுவதும் வருமாறு. ஈறாய்முதல் ஒன்றாய் இரு பெண்ஆண்குணம் மூன்றாய் மாறாமறை நான்காய்வரு பூதம் அவை ஐந்தாய் ஆறார்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானாய் வேறாய்உடன் ஆனான் இடம் வீழிம்மிழ லையே, [எல்லாப் பொருள்களுக்கும் இறுதியாம், அவற்றைத் தோற்றுவிக்கும் முதல்வனாகி, இவ்வாறு இறுதியும் முதலும் என்று கூறினும் ஒரே பொருளாய், ஆண் பெண் என்ற இரு பிரிவுள்ள பொருள்களாகி, சத்துவம், ராஜசம், தாமசம் என்ற
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை