மூன்று நிலை $25 குணங்கள் மூன்றாகி, பொருள் மாறாத வேதங்கள் நான்காகி, ஒன்றினின்றும் ஒன்று தோன்றி வருகின்ற பூதங்களாகிய அவை ஐந்தாகி, நுகர்கின்ற சுவை ஆறாகி, ஏழு ஓசையாகி, எட்டுத் திசை யும் தான் ஆகி, இவ்வாறு அபேதமாக அவையாகவே நிற்றலின் றிப் பேதமாய்ப் பிரிந்து வேறு ஆகி, அவற்றோடு கலந்து பேதா பேத நிலையில் உடனாகி இருப்பவனாகிய இறைவனுக்கு உரிய (வணங்குவாருக்கு அருள் புரியும் பொருட்டு எழுந்தருளியிருக் கும்) இடம் திருவீழி மிழலை.] முதலாகவும் இருக் அவன் ஈறாகவும் இருக்கிறான்; கிறான். இரு வேறு வகையாகச் சொன்னாலும் இறைவன் ஒரு பொருள்தான். ஆதலின், "ஈறய் முதல் ஒன்றாய்" என்றார். அவன் ஒருவன்தான் முடிந்த முடிபாகிய ஈறு அவன் ஒருவன்தான் முதல்களிலெல்லாம் முதல். ஆதலின், ஒன்று ஈறாய் முதலாய்' என்று பிரித்துக் கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். சம்பந்தப் பெருமான் இறைவனுடைய பெருமை யைப் பல வகையிலே பாடுகிறவர்; ஒன்று, இரண்டு, மூன்று முதலிய தொகைகளாக உள்ள பொருள்கள் அனைத் அதும் அவனே என்று சொல்லத் தொடங்கி அவன் ஆதியும் அந்தமுமாகிய ஒரு பரம்பொருள் என்றார். இதற்குமேல் இரண்டு முதல் எட்டுவரைக்கும் உள்ள எண்ணிக்கைகளை உடைய பொருள்களை நினைக்கிறார். மூன்று நிலை ஆதியும் அந்தமுமாகி நிற்கும் சிவபரம்பொருள் பிரபஞ்சத்தோடு மூன்றுவகைத் தொடர்பு உள்ளவனாக இருக்கிறான். பிரபஞ்ச முழுவதும் தானேயாக இருக் கிறான். பிரபஞ்சத்துக்கும் அவனுக்கும் பேதமில்லாமல் அபேதமாக விளங்குகிறான். பொன்னால் ஆன ஆபரணத்தை
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை