26 உள்ளம் கவர்கள்வன் வளை என்றும் சங்கிலியென்றும் வேறு பெயராலே குறிக் கிறோம். ஆனால் அவ்வளவும் பொன்தான். அப்படியே பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரம் பொருளாகிய இறைவனும் பிரபஞ்சத்திலுள்ள பல பொருள் களாகவும் இருக்கிறான். எப் பொருளும் தானாகி நிற்கும் இறைவன் அவற்றின் வேறாகவும் நிற்கிறான்; அவற்றினின்றும் பேதமுற்று நிற் கின்றான். பிரபஞ்சம் என்பது இட எல்லையையும் கால எல் லையையும் உடையது. இறைவனே அந்த இரண்டு எல்லையை யும் கடந்தவன். தண்ணீரும் அதைத் தன்னுள் அடக்கி நிற்கும் குடமும் ஒன்றனோடு ஒன்று தொடர்புடையது தான். ஆனால் வெவ்வேறாக இருக்கின்றன. இறைவனும் பிரபஞ்சத்துக்கு அப்பால் வேறாகவும் நிற்கிறான்.முன்னே சொன்னது அபேத நிலை; இது பேத நிலை. பிரபஞ்சத்தோடு உடனாக, ஒட்டியும் ஒட்டாமலும் நிற்கிறான். இதைப் பேதாபேத நிலை என்று சொல்வார். கள். மலரில் மணம் இருக்கிறது. மலர் முழுவதும் இசைந்து நிற்கிறது மணம். அதைத் தனியே பிரித்து அறியவொண் ணாது. மலரும் மணமும் ஒன்றுபட்டே இருக்கின்றன. ஆனாலும் மலர் வேறு, மணம் வேறு. இதுதான் ஒட்டியும் ஒட்டாத நிலை அல்லது பேதாபேத நிலை. சொல்லும் பொருளும் உள்ள நிலை இது. சொல்லிலே பொருள் விரவி இருக்கிறது. சொல் முழுவதும் பொருள் இருக்கிறது. ஆயினும் சொல் வேறு; பொருள் வேறு. இப்படி இறை வன் பிரபஞ்சத்தோடு ஒன்றி நின்றும் ஒட்டியும் ஒட்டாத நிலையில் இருக்கிறான். இந்த மூன்று நிலையையும் சிவஞான போதத்தின் இரண்டாவது சூத்திரம் பேசுகிறது.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை