மூன்று நிலை "அவையே தானேயாய்" 27 என்னும் அச் சூத்திரத்தின் பகுதியும், அவையே தானே யாய் என்பதனை இரட்டுற மொழிதலான். அவையேயாய் தானேயாய் அவையேதானேயாய் எனக் கூறிப் பொரு ளுரைக்க' என்னும் அதன் உரையும் இங்கே அறிவதற்கு உரியன. அபேத நிலை ஞானசம்பந்தப் பெருமான் அந்தமும் ஆதியுமாகிய சிவபரம்பொருள் இந்த மூன்றுவகை நிலையிலும் விளங்கி யருளும் திறத்தைச் சொல்லப் புகுந்து அபேத நிலையை முதலில் விரிவாகச் சொல்கிறார். உலகில் 'உள்ள உயிர் கூட்டங்கள் உடம்பு பெற்று வாழ்கின்றன. அவ் வுடம்பின் வேற்றுமையால் ஆண் என்றும் பெண் என்றும் இருவகையாக உலவுகின் அப்படி இருவேறு கூறாக உள்ளவை யாவும் இறை வனே. ஒன்றாகிய முதல்வன் இரண்டாக உள்ள ஆண் பெண்ணாக விளங்குகிறான்.* றன மக்களுக்குள்ள குணங்கள் பலவானாலும் அவற்றைக் சாத்துவிகம், ராஜசம், தாமசம் என்று அடக்கிவிடலாம். அந்த மூன்று குணங்களின் வசப்பட்டே மக்கள் செய லாற்றுகின்றனர். அந்தக் குணங்களாகவும் இறைவன் நிற்கிறான். ஒரு தனி முதல்வன் பெண் ஆண் என்னும் இரு வேறு பாலாகி, மூன்று குணமாகி விளங்குகிறான்.
"பெண் கண் ஏன நின் T,00 பெம்மாள்:' ஆணும் பெண்ணுமாய்" (திருஞா.தேவாரம், திருநாகைக் காரோணம், 2,8): "பெண் ஆண். ஆய பேரருளாளன்' ( திருக்கண்ணார்கோயில்,1), பெண் ஆணம்
- .
பெருமான்" (ஷ திருக்கள்ளில், 3,); "காணுமா றறியபெரு மானாகிக் காலமாய்க் குணங்கள் முன்றாய்' (திருஞா.தேவாரம், திருவீழிமிழலை, 5.)