பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. உள்ளம் கவர் கள்வன் இறைவனுடைய பெருமையையும், மக்கள் இன்னது செய்ய வேண்டும் இன்னது செய்தல் கூடாது என்பதை யும் சொல்வது வேதம். பாரத நாட்டில் உள்ள பழஞ் சமயங்கள் யாவும் வேதத்தைப் பிரமாணமாகக் கொண் டவை. ஆதலின் அவற்றை வைதிக சமயங்கள் என்று சொல்வார்கள். இந்து மதம் என்று இக்காலத்தில் வழங் கும் பெயர் பல சமயங்களுக்கும் பொதுவானது. அப்படி ஒரு தனிச் சமயம் இல்லை. ஆனாலும் சைவம், வைணவம் முதலிய சமயங்கள் பலவற்றிற்குப் பொதுவாக அந்தப் பெயர் அயல் நாட்டவரால் வழங்கப்பெற்று, நாளடைவில் நாமும் வழங்கும்படியாயிற்று. இச் சமயங்கள் அனைத்தை யும் பழங்காலத்துப் பெரியோர்கள் வைதிகம் என்ற பொதுப் பெயராலே குறிப்பர். வேதத்தைப் பிரமாணமாக உடை யவை என்பது அதற்குப் பொருள். ஆதலின் வேதம் பாரத தேசத்திற்கு மிகச் சிறந்தது. ஞானசம்பந்தப் பெருமானது திருவவதாரத்தைப் பற்றிச் சொல்ல வந்த சேக்கிழார். "வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க' என்று பாடுகிறார். இறைவனே வேதத்தை அருள் செய்தான்.வேதத் தின் பயனாக இருக்கிறான். வேதமாகவே இருக்கிறான். நான்கு என்ற எண்ணிக்கையுள்ள பொருளைச் சொல்ல வந்த சம்பந்தர், "மாறாமறை நான்காய்" என்று சொல் கிறார். வேதத்தை அநாதி என்றும், அநந்தம் என்றும், அபௌருஷேயம் என்றும் சொல்வார்கள். காலத்துக்கு ஏற்றபடி மாறுவன ஸ்மிருதி முதலியன. ஆனால் சுருதி யாகிய வேதமோ, என்றும் மாறாமல் இருப்பது. ஆதலின் 'மாறா மறை' என்று சொன்னார். இறைவன் நான்கு வேதங்