பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்று நிலை 29 களையே தன் நுட்பமான திருவுருவங்களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு வேதமூர்த்தி என்று ஒரு திருநாமம் உண்டு. "பண்ணார்தரு மறையாய்உயர் பொருளாய்இறை யவனாய்"* இறைவன் இருப்பதை வேறிடத்திலும் சம்பந்தர் திருவாய் மலர்ந்தருளி யிருக்கிறார். × இறைவன் ஐம்பெரும் பூதங்களாகவும் இருக்கிறான். புலன்களுக்கு எட்டும் பொருள்கள் யாவும் ஐந்து பூதங் களின் கலப்பினால் அமைந்தனவே. "நிலந்த நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்பது தொல்காப்பியம். '. இறைவனுடைய திருவுருவங்களே. இந்த ஐந்து பூதங்களும் இறைவனுக்கு ஐம்பெரும் பூதங் கள், இருசுடர், வேள்வித் தலைவன் என்னும் எட்டும் அவன் திருவுருவங்கள். இந்த எட்டில் ஐந்து பூதங்களும் அடங்கி யிருக்கின்றன. ஆதலால், "பூதம் அவை ஐந் தாய்" என்று சம்பந்தர் பாடினார். அட்ட மூர்த்தி என்பது ஒரு பெயர். இப்படியே இறைவன் ஆறு சுவையுமாக இருக்கிறான். பிறந்தது முதல் இறக்கும் வரையில் மனிதனிடம் விடா மல் நிற்கும் உணர்ச்சி சுவை யுணர்ச்சி. சுவையுணர்ச் சியை வென்றவர்கள் மற்ற உணர்ச்சிகளை எளிதில் வெல்ல முடியும். இனிப்பு, துவர்பு, கார்ப்பு, புளிப்பு, கைப்பு, உவர்ப்பு என்று சுவையை ஆறு வகைகளாகப் பிரித்துச்

  • திருவியலூர், 5.

"புவிழுதல்ஐம் பூதமாய்ப் புலன்ஐந்தாய் நின்றான்" (திருஞா. தேவாரம், திருக்கழுமலம், T.)