மூன்று நிலை 31. காலமும் அவனே அவற்றின் எல்லையை உணர முடியும். டமும் காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்ட வனையே எல்லையாக உடையவை என்றும் சொல்லலாம். இடத்தின் எல்லையை, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற சொற்களால் குறிக்கிறோம். பின்னும் வட கிழக்கு, வட மேற்கு, தென் கிழக்கு, தென் மேற்கு என்று நான்கு கோணத் திசைகளையும் கூட்டி எட்டு என்று சொல்கிறோம். ஆனால் இந்தத் திக்கின் முடிவை நாம் காண முடியாது. கிழக்கின் முடிவு, இடம் முடிகின்ற இடந்தான். ஓர் ஊர் நாம் இருக்கும் இடத்துக்குக் கிழக்கே இருக்கிறது. அதனோடு கிழக்கு முடிந்து விடு கிறதில்லை. அதற்குக் கிழக்கிலும் பல ஊர்கள் உண்டு. இப்படியே தொடர்ந்து சென்றால் கிழக்கு நீண்டு கொண்டே போகும். 'இனிமேல் கிழக்கு இல்லை; கடை "சிக் கிழக்கு இதுதான்' என்று அறிந்து சொல்வார் யாரும் இல்லை. கிழக்கின் முடிவிலே இடம் என்பதும் முடிவடை கிறது. அங்கே இடங் கடந்த இறைவன் இருக்கிறான். எனவே, கிழக்கின் கடைசியாக, எல்லாவற்றிற்கும் கிழக் காக இருப்பவன் இறைவன்தான். இப்படியே ஒவ்வொரு திக்கிலும் எல்லையாக நிற்கிறவன் இறைவன். . கிழக்கு எப்போதும் கிழக்காகவே இருப்பதில்லை. ஒரூர் தனக்கு மேற்கே உள்ள ஊருக்குக் கிழக்கே இருக் கிறது. ஆனால் தனக்குக் கிழக்கே உள்ள ஊருக்கு அது மேற்கில் உள்ளது. ஆதலின் அந்த ஊரைக் கிழக்கில் உள்ளது என்று சிலரே சிலரே சொல்ல முடியும். அதற்கு வடக்கே உள்ளவர். அது தெற்கில் உள்ளது என்பார்கள்; தெற்கே உள்ளவர்கள் வடக்கே உள்ளது என்பார்கள். ஆதலின் கிழக்கு, மேற்கு என்று வரையறையாக ஓரிடத்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/40
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை