பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உள்ளம் கவர் கள்வன் அலைகிறது. அந்த அலைச்சலால் இறைவன் அங்கே நின்றா லும் தெரிவதில்லை. அவ்வாறு இன்றிப் பொறியாகிய வாயிலை அடைத்து மனத்தை ஒருமைப்படுத்தித் தியானம் செய்தால் இறைவன் அங்கே நிற்பான். அது மாத்திரமா? "இதுகாறும் நாம் இங்கே நின்றும் இவன் ஓடிக்கொண்டே இருந்தான். தான் ஓடும் ஓட்டத்தினால் நாம் ஓடுவதாக எண் ணியிருந்தான். இப்போதுதான் இவன் நின்றான்; எண் ணத்தை ஒருமைப்படுத்தி ஒன்றி நின்று நினைக்கிறான். இவனுக்கு அருளவேண்டும்" என்று இறைவன் தன் திரு வுள்ளத்திலே உவகை பூண்பான். எண்ஒன்றி நினைந்தவர் தம்பால் உள்நின்று மகிழ்ந்தவன். . பலபல எண்ணங்களிலே மனத்தைச் சிதறவிடாமல் ஒரே எண்ணத்திலே ஒன்றுகிறார்கள் அன்பர்கள். இறை வனைச் சிந்திக்கும் எண்ணந்தான் அது. அவ்வாறு தியானம் செய்பவர்களிடம் இறைவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஒருவர் வீட்டுக்கு விருந்தாளி ஒருவர் போகிறார். அவரைக் கண்டவுடன், "வாருங்கள், உட்காருங்கள்" என்று கூறினால் வந்தவருக்கு மகிழ்ச்சி உண்டாகும். விருந்தாளியைப் பார்க் காமலே இருந்தால் அவருக்கு எவ்வளவு வருத்தமாக இருக் கும்! தெரிந்தவர்கள். "உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாரே; அவரைக் கவனித்தாயா?" என்று கேட்கிறார்கள். அவர் கள் உரையைக் கேட்ட பிறகும் சும்மா இருந்தால் வந்தவர் எப்படித் தம் இன்முகத்தைக் காட்டுவார்? சிவபரஞ்சுடர் நம் உள்ளக்கூடத்தில் இருக்கிறான் என் பதை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அதைக் கேட்டும் காம் அவனைக் கவனிப்பதில்லை.