பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள் நின்றவன் 39 மல் ஒன்றியிருந்து நினைக்கும் அவர்கள் தம் உள்ளத்தில் இறைவன் நின்று மகிழ்ந்து செய்யும் அருளை நுகர்கிறார் கள். அந்த நுகர்ச்சி அவர்களுடைய உரையிலே செய லிலே வெளிப்படும். கள்ளானது தேங்கி நிற்க, மேலும் மேலும் ஓங்கி வளர்கின்ற சோலையிலே வண்டுகள் (தேனை உண்டு அந்த அமைதியினாலே) நின்று நிதானித்துப் பண்களை ஒலி செய் கின்ற திருப்பனையூர், இறைவனுடைய ஊராகும்' என்று சம்பந்தப் பெருமான் பாடுகிறார்.

எண்ஒன்றி நினைந்தவர் தம்பால் உள்நின்று மகிழ்ந்தவன் ஊர்ஆம், கள் நின்றெழு சோலையில் வண்டு பண் நின்றொலி செய்யனை யூரே. [எண்ணம் ஒருமைப்பட்டுத் தியானம் செய்கின்ற அன்பர்களி. டத்தில் அவர்களுடைய உள்ளத்துள்ளே நின்று மகிழ்ச்சி பெற்ற இறைவனது ஊராகும், தேன் தேங்கி நிற்க ஓங்கி வளரும் சோலை யில் வண்டுகள் பண்களை அமைதியாக இருந்து முரலும் திருப்பனையூர். பனையூர், மகிழ்ந்தவன் ஊராம் என்று வாக்கியம் முடியும். எண் - எண்ணம். ஒன்றி-ஒருமைப்பட்டு,"ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லை" என்பது இங்கே நினைவுக்கு வருகிறது. உள் உள்ளம். ஆம்-ஆகும். கள்-தேன். நின்று - சிற்க; எச்சத்திரிபு. எழு-ஓங்கி வளரும். எழு-ஓங்கி வளரும். பண்- ராகம். ஒலி செய்- பாடும்.] திருப்பனையூர் என்னும் தலம் நன்னிலத்துக்கு அரு கில் இருக்கிறது. சுவாமி திருநாமும் சௌந்தரியநாதர்; அம்பிகை திருநாமம் பெரிய 47253