விடம் உண்ட ஈசர் . உள்ள மூங்கிலின் முளைகளைப் பறித்துக் கைநிறைய வாரு கிறது. பிடியை நீ உண் என்று சொல்லவில்லை. மூங்கில் முளை சுவையுடைய தானாலும், அதற்குப் பின்னும் சுவை யூட்டும் செயலில் ஆண் யானை முற்படுகிறது. தான் வாரிய வெதிர் முளையை (மூங்கில் முளையை)த் தன் கையாலேயே பிடிக்குக் கொடுக்கிறது. கரிய யானை,மதம் பொருந்திய ஆண் யானை, அன்புடைய பிடியினிடம் அன்பு செய்யும் காட்சி இது. இப்படி அன்பு மணக்கும் கற்குடியிலே அருள் மணக் கும் ஈசர் எழுந்தருளியிருக்கிறார். மருங்கு அளி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக் கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலை யாயிர [பக்கத்தில் நிற்கும் அன்பு நிறைந்த பெண் யானையின் வாயில், வளர்கின்ற பச்சை மூங்கிலின் முளையை வாரி, கரிய மதம் பொருந்திய ஆண் யானையானது கொடுக்கும் திருக்கற்குடி மாமலையில் இருக்கிறார். ஈசர் கற்குடி மாமலையார் என்று கூட்ட வேண்டும்.மலை யார் குறிப்பு வினைமுற்று.) தன்னுடன் தொடர்புடையார்பால் அன்பு: தொடர்பில்லாதவரிடத்தும் உண்டாவது பகைவரிடத்தும் உண்டாவது அருள். இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தில் வாழும் விலங்கினங்களிடங்கூட அன்பு விளக்கம் பெறுகிறது. அவ்விடத்தில் அன்பின் விரிவாகிய அருள் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கிறான். தேவர்கள் தனித்தனியே மாய்வதையன்றி, எல்லோ ரும் ஒருங்கே மாயும்படியாக வந்தது ஆலகால விடம்.
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/52
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை