பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உள்ளம் கவர் கள்வன் இறைவன் அவர்கள் அனைவரையும் ஒருங்கே காப்பாற்றி னான். ஆதலின் ஒருங்கு என்பதையும் தேவர் கூற்றாகச் சேர்த்து, "நாங்கள் அனைவரும் மாயும்படி நஞ்சு எழுந் திருக்கிறது. எங்கள் அனைவரையும் ஒருங்கே காத்தருள் வேண்டும்" என்று கொள்வதும் பொருந்தும். 66 நஞ்சை உண்ட இறைவன் அந்த நஞ்சின் கொடு மையை நினைக்கவில்லை. இது இந்தக் குழந்தைகளுக்கு நல்லறிவு கொளுத்திய பொருள்" என்று எண்ணியமையால் அதனை இனிய அமுதாகக் கொண்டான். எம்பெருமான் முன்னே இனிய அமுதாக அதனை உண்டமையால்தான், பின்னே உம்பர்கள் இனிய அமுதை உண்ண முடிந்தது. ஒருங்களி நீ இறை வாஎன்று உம்பர்கள் ஓல மிடக்க மிடக்கண்டு இருங்களம் ஆர விடத்தை இன்னமு துண்ணிய ஈசர், மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முலை வாரிக் கருங்களி யானை கொடுக்கும் கற்குடி மாமலை யாரே.