நல்லபடி நாமம் நவிலுதல் 49 வ்வாறு வலிவலம் என்னும் திருத்தலத்து இறைவ னைப் பார்த்து வேண்டுகிறார் ஞானசம்பந்தர். ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்துவெய்ய சொல்லை ஆறித் தூய்மை செய்து காம வினை அகற்றி நல்ல வாறே உன்றன் நாமம் நாவில் நவின்றேத்த வல்ல வாறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே! கள்ளம் ஒழிந்து, (வேகம் ஆறி உள்ளம் ஒன்றுபட்டுக் வெம்மையான சொற்கள் ஆறித் தூய்மையை உண்டாக்கி, ஆசை யினாற் செய்யும் செயல்களை விட்டு, நல்லபடி உன்னுடைய திரு நாமத்தை நாவினால் பலகாலும் சொல்லி உன்னைப் புகழ வல்ல வழியை என்பால் எழுந்தருளிவந்து வழங்குவாயாக, வலிவலத்தில் எழுந்தருளிய பெருமானே! ஒல்லை ஆறுதலும், ஒன்றுதலும், கள்ளம் ஒழிதலும் உள்ளத் தின் செயல்; வெய்ய சொல் ஆறுதலும், தூய்மை செய்தலும் உரையின் செயல்; காம வினை அகற்றல் உடம்புக்குரியது. தூய்மை பெறும் முறையில் உள்ளத்தின் பங்கு பெரிது; அதற்கு அடுத்தது உரையின் பங்கு; அதற்கு அடுத்தது செயலின் பங்கு. ஆதலின் முறையே மூன்று, இரண்டு, ஒன்று என்ற வினைகளாற் புலப்படுத்தினார். நல்லபடி நாமம் நவிலுவதற்கு முதலில் உள்ளம் தூயதானால், உரை தூயதாம்; பின்பு செயல் தூயதாம். இந்தக் காரண காரிய முறைப்படி வைத்துச் சொன்னார். சொல்லை: ஐ.சாரியை, சொல்லினின்றும் ஆறி என்று உருபு மயக்கமாகக் கொள்ளுதலும் பொருந்தும். சொல்லை ஆற்றுவித்து என்றும் சொல்லலாம். சினம் வருவது இயல்பு; அதனை ஆற்றுதலே அறிவின் பயன். "ஆறுவது சினம்" என்று ஒளவையாரும், உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினங்காத்துக், கொள்ளுங் குணமே குணம்என்க" என்று சிவப்பிரகாசரும் கூறியவை காண்க.. 4 று
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை