பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டுவிடு தூது 55 அவரோ என்பு மலி மாலையை அணிந்திருப்பார். அதனால் அவரைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். அங்கத் தை (எலும்பை)ப் பூணாக மார்பில் அணிந்திருக்கும் பெரு மான் அவர். அவர் திருத்தோணிபுரத்தில் உறைகிறார். அவர் அப்படி இருக்கிறாரே என்று எண்ணாதே. அவர் அற்புதமாக நடனம் ஆடுகிறவர். பாட்டுப் பாடுகிறவன் நீ. உனக்கு ஆட்டம் ஆடுகிறவரைக் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும். அவர் பாண்டாங்கம் என்னும் நடனத்தைத் திரிபுர சங்கார காலத்தில் ஆடினவர். அவரிடம் என் நிலை மையை ஒருமுறை சொன்னாலே போதும். குறிப்பறிந்து ஆண்டருளுகிற கிற பெருமான் அவர். பல முறை சொல்லித் தெரிய வேண்டும் என்பது இல்லை. என் தீவினைப் பயனால் எனக்கு அருள் செய்யாமல் இருக்கிறார்; என்னை மறந்து நிற்கிறார். ஒருமுறை நினைப்பூட்டினால் போதும்; உடனே வந்து அருள் செய்வார். அதிக அதிக வேலையை வேலையை உனக்கு : நான் வைக்கவில்லை." இவ்வாறு ஞானசம்பந்த நாயகியார் வேண்டுகிறார். வண் தரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும் ஒண்தரங்க இசைபாடும் அளியரசே! ஒளிமதியத் துண்டர், அங்கப் பூண்மார்பர், திருத்தோணிபுரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகாற் பகராயே. (வளப்பமான அலைகளையுடைய (பொய்கை) நீரில் பூத்த தாமரை மலரிலே உள்ள தேனை உண்டு பெண் வண்டோடு விளக்க மான் அலை போல வருகின்ற இசையைப் பாடும் வண்டரசே ! ஒளியையுடைய சந்திரனின் துண்டாகிய பிறையை அணிந்தவரும், எலும்பை அணிந்த மார்பை உடையவரும், திருத்தோணிபுரமாகிய சீகாழியில் எழுந்தருளியிருக்கும் பண்டரங்கரும் ஆகிய என் காத லருக்கு (பிரிவினால் வருந்தும்) என்னுடைய நிலைமையை என்னிடம் இரக்கம் காட்டி ஒருமுறை சொல்வாயாக.