64 உள்ளம் கவர் கள்வன் அவன் வந்து அருள் செய்வான் என்று சம்பந்தர் உப தேசிக்கிறார். இத்தகைய பேருபகாரத்தைச் செய்யும் பெருமான் எங்கோ கண்காணாத, உள்ளம் எட்டாத இடத்தில் இருக் கிறான் என்று எண்ண வேண்டாம். சோழ நாட்டுத் திருவை யாற்றில் திருக்கோயில் கொண்டிருக்கிறான் சொல்ல வருகிறார். என்று நீர் வளமும் நில வளமும் மிக்க ஊர் திருவையாறு. திருக்கோயிலைச் சுற்றிலும் மடவார்கள் வலம் வருகிறார். கள். வலம் வந்த பிறகு இறைவன் சந்நிதியில் நடனமிடு கிறார்கள். அப்போது சிலர் மிருதங்கம் வாசிக்கிறார்கள். பெண்கள் ஆடையணி மின்ன நடமிடுவதைக் கண்டும் முழவின் ஒலியைக் கேட்டும் அங்கே இருந்த குரங்குகள் மழை வருமோ என்று அஞ்சுகின்றன. வானத்தில் மழைக்குரிய அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அறியும் பொருட்டு விறு விறு வென்று மரத்தின்மேல் ஏறி வானத்தை அண்ணாந்து பார்க்கின்றன; மேகத்தைப் பார்க்கின்றன. மழை வரும் என்று அஞ்சுவதற்குக் காரணம் என்ன? மடவார்கள் உருவத்தாலும் நடனத்தாலும் மயிலைப்போலத் தோற்றுகின்றனர். முழவின் ஒலி மேகத்தின் ஒலியைப் போல இருக்கிறது. மேகம் மழை பெய்யத் தொடங்கும் போது இடி இடிக்கும்; அதைக்கண்டு மயிலாடும் அல்லவா? மடவார் இடும் நடமும் முழவு அதிரும் ஒலியும் மயிலின் நடனமாகவும் மேகத்தின் முழக்கமாகவும் தோற்றி, மழை வருமோ என்ற அச்சத்தை உண்டாக்கின. அதனால் மந்திகள் மரம் ஏறி முகிலைப் பார்த்தன. .
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/73
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை