70 உள்ளம் கவர் கள்வன் சொல்ல இயலாது. உலகில் உள்ள எல்லாப் பொருளுக்கும் தோற்றம், மறைவு உண்டு. அப்படியே உள்ளமும் ஏதோ. ஒரு காலத்தில், மிகமிகப் பழங்காலத்தில், தோன்றியது என்று வைத்துக் கொண்டால், அந்தப் பழங்காலத்தில் இறைவன் இருதயாலயேசுவரனானான் என்று சொல்லலாம். . இப்போது புறத்திலிருக்கும் கோயில்களில் பல நூற் றாண்டுகளுக்குமுன் எழுந்த பழங் கோயில்களும் உண்டு: அணிமையில் தோன்றியனவும் உண்டு. குடைவரைக் கோயில்கள் பல்லவர் காலத்தில் உண்டான பழங் கோயில் கள் என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். அவற்றைவிடம் யழமையான கோயில் உள்ளக் கோயில். ஆகவே அதில் எழுந்தருளியிருக்கும் அகக் கோயிலுடையான் மிகப் பழமையானவன். புராணம் என்பது பழமைக்கு ஒரு பெயர். மிகப் பழமையானவனாகிய உள்ளக் கோயிலுடை யான் புராணன்; பழம் பெருங் கடவுள். உள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர். அகக் கோயிலாகிய இருதய கமலத்தில் எழுந்தருளி யிருக்கும் அந்தப் பெருமானே புறத்தில் பல தலங்களில் கோயில் கொண்டிருக்கிறான். அவற்றில் திருவீழிமிழலை என்பது ஒன்று. அதன் நீர் வளத்தையும் நில வளத்தை யும் ஓர் அழகிய காட்சியைக் கூறிப் புலப்படுத்துகிறார் ஞானசம்பந்தர். நல்ல நீர் நிரம்பிய பொய்கை; அதன் ஒரு பக்கத்தில் பளிங்குப் பாறை; அதன்மேலே பல சங்குகள் தொகுதி யாகத் தவழ்ந்து வந்திருக்கின்றன. காற்று அடித்தால் அவை முழங்குகின்றன. அங்கே ஓர் ஓரத்தில் தாம்
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/77
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை