72 உள்ளம் கவர் கள்வன் புகலுடையோர் தம்உள்ளப் புண்டரிகத் துள் இருக்கும் புராணர் கோயில்: தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க் திகழச் சலசத் தீயுள் கம் மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட மணம்செய்யும் மிழலை யாடும. (உள்ளத்தே பொருந்திய அன்பை உடையவராய், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் ஆறு பகையையும் அழித்து, ஐந்து பொறிகளையும் அடக்கி, ஞானம் உள்ளே புகுநலையுடையவர்களுடைய உள்ளமாகிய தாமரையி னுள் எழுந்தருளியிருக்கும் பழைய பெருமானுடைய திருக்கோயில், தூய்மை முதலிய தகுதியை உடைய நீரையுடைய பளிங்குப் பாறை யில் உள்ள சங்குக் கூட்டம் முழங்கியபடி விளங்க, தாமரையாகிய தீயில் புன்கமரம் தன் மலராகிய பொரியை இட, அங்குள்ள மீன் முதலிய உயிர்கள் மணம் புரியும் திருவீழிமிழலையாம். அகன் - உள்ளம்; அகம் என்பதன் போலி. செற்று - அழியச் செய்து, புலன் என்பது பொறியால் நுகரப் பெறும் தன்மாத் திரைக்குரிய பெயரேனும் இங்கே ஆகு பெயராய்ப் பொறியைக் குறித்து நின்றது. புண்டரிகம் - தாமரை. புராணர் - பழையவர்; "தொல்லோன் காண்க" (திருவாசகம்). தகவு - தகுதி; நீருக்கு உள்ள தகுதி, மணி - பளிங்கு; மணித்தலம் - பளிங்காகிய இடம்; பளிங்குப் பாறை. உள சங்கு வர்க்கம் என்று கூட்டிப் பொருள். கொள்ள வேண்டும். வர்க்கம் -கூட்டம். திகழ - விளங்க. சங் குக்கு விளக்கம் அதன் முழக்கம். சலசம் - நீரில் தோன்றியது; தாமரை. புன்கு - புன்கமரம் : எழுவாய்.அட்ட - இட. மணம் செய்வார் இன்னார் என்று கூறாவிடினும் இடம் நோக்கிப் பொய்கை யிலுள்ள பிராணிகள் என்று கொள்ள வேண்டும். 4-7253
பக்கம்:உள்ளம் கவர் கள்வன் 1956.pdf/79
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை