பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

உள்ளம் குளிர்ந்தது

அஞ்சுவதற்குரியன வந்தாலும் அஞ்சாமல் இருக்கும் மன நிலை உள்ளவர்களும் இருக்கிறார்கள். பகையைக் கண்டு அஞ்சாமல், தம்முடைய வீர மிடுக்கைக் காட்டுவதற்கு ஏற்ற வாய்ப்பு இது என்று எண்ணிக் கொதித்து எழுகின்ற வீரர்கள் இருக்கிறார்கள். பிணியைக் கண்டு அஞ்சாமல், அதனைப் போக்குவதற்குரிய மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள். ஆகவே அச்சத்தைத் தருவனவற்றைக் கண்டு அஞ்சாமல் இருப்பதற்கு, அவற்றால் வரும் துன்பத்தைப் போக்கிக்கொள்ள முடியும் என்ற மன நிலையே காரணம். ஞானம் பெற்ற ஜீவன்முக்தர்கள் எதற்குமே அஞ்சமாட்டார்கள்.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை"

என்பது அப்பர் திருவாக்கு.

மரணம்

ல்லாருமே அஞ்சுவதற்குரிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அதுதான் மரணம். மரணத்திற்கு மிகப்பெரியவர்களும் அஞ்சுவார்கள் என்பதை முன்பே சில முறை பார்த்திருக்கிறோம். இறைவனுடைய திருவருளைப் பெற்றவர்கள் மிகத் திண்மையான நெஞ்சு பெறுவார்கள். கடைசி அச்சமாகிய மரண பயம் கூட அவர்களுக்குப் போய்விடும். காரணம், மரணத்தினால் தமக்கு விடுதலை வரும் என்ற உறுதிப்பாடு இருப்பதுதான். இந்த உடம்பை விட்ட பிறகு இறைவனுடைய திருவடியை அடையும்படி சம்பவிக்கின்ற மரணம் மரணம் அன்று. வேறு உடம்பில் புகுவதற்கு இப்போது மரணம் நேருமானால் அதுதான் அஞ்சுவதற்குரியது. அதைத்தான் மரணம் என்று சொல்ல வேண்டும். மெய்ஞ்ஞானிகள் தாம் பெறவேண்டியதைப் பெற்று இனிப் பிறவி எடுக்காத வகையில் நின்றால், அவர்-