பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடையோர், நூலால் உண்டாகும் பயன் என்பவை எட்டுச் சிறப்பான கூறுகள். நூல் உண்டானதற்குக் காரணம், நூல் அரங்கேற்றிய இடம், நூலின் காலம் என்பன சிறப்பு இல்லாதவை. சிறப்பான எட்டுக் கூறுகளில் கடைசியாக வைத்திருப்பது பயன். பொதுவாக எல்லா நூல்களுக்கும் அறம்,பொருள், இன்பம்,வீடு என்னும் நான்கையும் பெறுதல் பயன் என்று சொல்வார்கள். ஆனாலும் அந்தப் பயனுக்கு வகையான சில பயன்கள் உண்டு. சட்ட நூலைக் கற்றவனுக்குச் சட்ட அறிவு பெறுவது பயன். இசை நூல் கற்றவனுக்கு இசை பற்றிய அறிவு உண்டாவது பயன். அதுபோல் இறைவனுடைய துதி நூல்களைப் படிக்கின்றவர்களுக்குப் பக்தி உண்டாதல் பயன்.

இப்படி அந்த அந்த நூல்களுக்கு ஏற்ற பயன்கள் உண்டு. பாடம் சொல்பவர்கள் அவற்றைப் புலப்படுத்துவார்கள். நூலுக்குரிய பயன் இன்னது என்று அந்த நூலை இயற்றிய ஆசிரியரே சொல்வதும் உண்டு. இதனை வட மொழியில் பலசுருதி என்று சொல்வார்கள். கம்பராமாயணத்தின் பயனைச் சொல்ல வந்த கம்பர்,

"நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலைஇ ராமன் தோள்வலி கூறு வோர்க்கே"

என்று சொன்னார். தேவாரத்தில் ஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும், இந்தப் பதிகத்தைப் பாடினால் இன்ன பயன் உண்டாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் திருப்பதிகத்தில்.

"ஒருநெறியமனம் வைத்துணர் ஞானசம் பந்தன் உரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே"

என்று பயனைச் சொல்கிறார் ஞானசம்பந்தர். ஒவ்வொரு