பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

123

வருவதாக ஒப்புக்கொண்டேன். மட்டக்களப்பை முன்னாலே நாள் பார்த்தது இல்லை. ஆதலால் அந்த இடத்தைப் பார்க்கும் பயனும் நமக்குக் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒப்புக்கொண்டேன்.

வேலணையில் திருமுறை விழா முடிந்த பிறகு ஒருநாள் புறப்படுவது என்று திட்டமாயிற்று. அன்று அமாவாசை. எனக்கு மிகவும் வேண்டியவரும் என்னுடைய இளைய சகோதரர்போல் இருப்பவரும் ஆகிய இராசேந்திரகுருக்கள் என்பவர் யாழ்ப்பாண நகரத்திற்கு அருகில் நீர்வேலி என்ற ஊரில் வாழ்கிறார். எனக்குச் சொந்தமான வீடு ஒன்று அங்கே இருப்பது போலவே நான் கருதுகிறேன். அவரும் குடும்பத்தினரும் என்னையும் தம் குடும்பத்தில் ஒருவனாக எண்ணி உபசரிக்கும் பேரன்பு உடையவர்கள். அமாவாசை அன்று அவர் வீடு சென்று நீராடித் தர்ப்பணம் செய்து உணவு கொண்டு அங்கிருந்து மட்டக்களப்புக்குக் காரில் புறப்படலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். எங்களுடைய காரியாலயத்திலிருந்து இலங்கைக்கு ஓர் அன்பர் வந்திருந்தார். அவரையும் துணையாக அழைத்துக் கொண்டு போவதாக உத்தேசம் இருந்தது. குறிப்பிட்ட நாளில் உணவுகொள்வதற்கு ஒரு மணி ஆயிற்று. அப்பால் மட்டக்களப்பு அன்பர்களும், நானும், என்னுடைய காரியாலய அன்பரும் ஒரு காரில் புறப்பட்டோம். எங்களுடன் திருவாளர் பொ.கிருஷ்ணபிள்ளை என்ற தமிழ்ப்புலவரும் வந்தார். அவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.


பல ஊர்களைக் கடந்து பொலன்னருவா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். பழங்காலத்தில் அரசர்கள் ஆண்ட இடம் அது. பல அருமையான சின்னங்களை இன்றும் அந்த நகரில் பாதுகாத்து வருகிறார்கள். அங்கே நாங்கள் வரும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. கதிரவன் மேல் திசையில் மறைந்தான். அப்போது கார் ஓட்டியவர் ஒன்று