பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

எனப் பாஸ்டன் பத்திரிகை ஒன்று எழுதியுள்ளது.

இனி, 1898 டிசம்பர் 18-ஆம் தேதி டஸ்கிகீக் கலாசாலைக்கு நன்னாள் ஆயிற்று. அன்று ஐக்கிய மாகாணத்துத் தலைவர் மெக்கின்லி என்பாரும் அவரது மந்திரி சபையாரும் ஆங்கு வந்து பார்வையிட்டார்கள். புக்கர் டஸ்கிகீப் பள்ளிக்கூடந் துவக்கிய காலத்திலேயே ஒன்று நினைத்ததுண்டு. தாம் அமைக்கும் பள்ளிக்கூடம் ஒருநாள் தேசத்தலைவரால் வந்து பார்க்கத்தக்க அளவு தேசத்திற்குத் தொண்டியற்றுவதாக இருக்க வேண்டும் என்பதே அந்நினைப்பு. அஃது இப்பொழுது நிறை வெய்தியது. தேசத் தலைவர் அப்பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் தங்கிப் போவதற்காக மிக்க தொலையிலிருந்து வந்திருக்கிறார் என்ற செய்தி நீகிரோவர்க்குப் பெரியதொரு நம்பிக்கையையும் ஆதரவையும், மகிழ்ச்சியையும் அளிப்பதாயிற்று. டஸ்கிகீ வெள்ளையருங் கொண்டாட்டங்களிற் கலந்துகொண்டனர். நேரத்தைச் சிக்கனப் படுத்தும் நோக்கத்துடன், கலாசாலையின் பகுதிகள் எல்லாவற்றையும் தேசத் தலைவர் ஒன்றரை மணி நேரத்திற் பார்த்து அறிந்து கொள்ளக்கூடிய முறையில் யாவும் அமைத்துக் காட்டப்பட்டன.

மெக்கின்லி எழுந்து தமது நன்றியைப் புக்கருக்கும் ஆசிரியர் பிறருக்குத் தெரிவித்துக்கொண்டு டஸ்கிகீக்