பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பெறுதல் ; 6, இரவுச்சாப்பாடு ; 7-10, மாலை வழிபாடு : 7-30 முதல் 8-45 வரை, மாலைப்படிப்பு ; 9-30 படுக்கச் செல்லும் மணி அடிக்கப் பெறுதல்.

இப்படி ஆடவரும் பெண்டிரும் எந்நேரமும் அங்குச் சுறுசுறுப்பாக இருப்பதாலும், வருகின்றவர்கள் எல்லாரும் கல்வியே நோக்கமாக வருவதாலும், அங்கு வம்பிற்கு இடமில்லை. முன்னர் இடிந்து கிடந்த சந்தைக் கூடத்திலும், கோழியறையிலும் ஒரு டாலர் காசின்றி ஆசிரியர் ஒருவரும் மாணவர் முப்பதின்மரும் இருந்து நடந்த பள்ளிக்கூடம், இப்பொழுது நாற்பதின் மிக்க அழகான கட்டடங்களை உடையதாய், இரண்டாயிரத்தைந்நூறு ஏக்கர் நிலமுடையதாய், நூறாயிரக்கணக்கான டாலர் பொருட்செல்வமுடைய தாய், ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களையும் ஆசிரியர் நூற்றுவரையும் உடையதாய் விளங்குகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்திற் பயிர் நிற்கிறது. முப்பது வகையின் மேற்பட்ட கைத்தொழில்கள் கற்பிக்கப்படுகின்றன. இரண்டு நூறாயிரம் டாலருக்கு மேலும் வைப்பு நிதி உளது. அதன் வட்டி ஆண்டு தோறும் வளருகிறது. ஆண்டு ஒன்றிற்கு அக்கலா சாலை நூறாயிரம் டாலர் செலவிடுகிறது. இருபத்தேழு மண்டலங்களிலிருந்தும் மாணவர் பலர் வந்து கல்வி பயில்கின்றனர். ஏறத்தாழ, மூவாயிரம் ஆண் பெண்