பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

போடக்கூடிய ஆற்றல் இல்லை. அதனல் வழிப்போக்கர் வருவாரா எனப் பல மணி நேரம் அத்தன்னந்தனியான வழியில் அவர் நிற்க நேரிடும். மாலையில் பொறி நிலையத்தைச் சேர்ந்தால், விடு திரும்புவதற்குள் இருட்டி விடும். வழியோ, காட்டு வழி. நீகிரோ சாதியார் என்று கேட்ட மாத்திரத்திலேயே, அவர்தம் காதை அறுக்கும் பழைய பட்டாளத்தார் பலர் அவ்வழியே வருவர். இவற்றிற்கெல்லாம் தப்பித் திரும்பினால், தோட்டம் சேர்ந்தவுடன், நாழி கழித்து வந்ததற்காக அடியோ உதையோ உறுதியாக உண்டு.

இங்ஙனம் காலங்கழித்து வருங்காற் சிற்சில வேளைகளிற் புக்கர் தம் எசமாட்டியின் புத்தகங்களைப் பள்ளிக் கூடம்வரை எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்து வருவதுண்டு. அவ்வேளைகளில், அப்பள்ளிக்கூடத்தில் சிறுவர்களும் சிறுமிகளும் படிப்பதைக் கண்ட புக்கர், அவர்களுள் தாமும் ஒருவராகப் படிக்க விடப்பட்டால், அது தாம் வானுலக இன்பம் பெற்றதாகும் என நினைத்த துண்டு.

புக்கரின் ஆண்டானுடைய வீட்டைப் 'பெரிய வீடு' என்று கூறுவார்கள். அவ்வீட்டிற்குப் போய், சாப்பாட்டு மேசைமீது மொய்க்கும் ஈக்களை ஓட்டுவதற்காகப் புக்கர் பல வேளைகளில் விசிறி போடும்படி ஆணை-