பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

யிடப்பட்டார். ஒரு நாள் இளைய எசமாட்டியர் இருவர் சில விருந்தினரோடு இஞ்சிப்பணியாரம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட புக்கருக்கு, அதைப்போலத் தாமும் விடுதலை அடைந்த பின் உண்ணவேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.

உண்பதற்கே இல்லயென்றால், உடுக்க எங்கே இருக்கும்? முரட்டுச் சணலால் ஆகிய சட்டைதான் அவருக்கு உண்டு. அடிமைகள் எல்லோருமே அக்காலத்தில் அதைத்தான் அணிய வேண்டும். ஒரு புதுச் சணற் சட்டையைப் போட்டுக்கொள்வதற்கு ஒப்பான துன்பம் பல்லைப் பிடுங்குவதால் வருந் துன்பம் எனின், அச் சட்டையின் இனிமையை அறியலாம். நூறு குண்டுசிகள் உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படி அச்சணற்சட்டை இருந்தது எனின், அதன் நயத்தை என் சொல்வது !

இத்துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கிய ஒரு நன்னாள் வந்தது. அடிமைகள் எல்லாம் விடுதலையடைந்தார்கள். புக்கர் இருந்த வர்சீனியா (Virginia)த் தோட்டத்து அடிமைகளும் தளையினின்று விடுபட்டார்கள். அப்பொழுது புக்கரின் தாய் தன் குழந்தைகளே அனைத்துக்கொண்டு உவகைக் கண்ணீர் சொரிந்தாள். இந்த நாள் விரைவில் வரவேண்டுமென்றுதான் அவள்