பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமையும் இன்னலும்

23

புக்கர் பின்னுளிலே அறிந்துகொண்டார்.

சுரங்கத்தில் வாஷிங்குடன் வேலை பார்த்து வரும் பொழுது ஒரு நாள் ஒரு செய்தியைக் கேள்வியுற்றார். அஃதாவது, ஹேம்புடன் (Hampton) என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடம் நீகிரோவருக்காக அமைக்கப்படும் என்பது. அந்தப் பள்ளிக்கூடத்திற் சேரும் ஏழை மாணவர், ஏதேனும் ஒரு வேலை செய்து தத்தம் உண்டிக்கு வேண்டிய பணத்தை முழுதுமோ பாதியோ பெற்றுவிடக்கூடும் என்றும், அப்பள்ளிக்கூடத்தே அம் மாணவர் ஏதேனும் தொழிற்கல்வியை அதே வேளையிற் பெறக்கூடும் என்றும் சிலர் பேசிக்கொண்டிருந்தது வாஷிங்குடன் செவியிற்பட்டது. அது முதல், அவர் சிந்தையெல்லாம் ஹேம்புடன் பள்ளியிலே சென்றது. அதுவே உலகிலுள்ள பல இடங்களிலும் சிறந்த இடம் என அவருக்குத் தோன்றிற்று. அதன்பால் அவருக்கு எழுந்த ஆசை, விண்ணுலகின்பால் தோன்றக்கூடியதை விட மிக்கது. எப்படியாயினும் அப்பள்ளியிற் சேர்ந்து விடுவது என்ற உறுதிக்கு வந்துவிட்டார். அவர் இந்தத் தீர்மானஞ் செய்துகொண்ட பொழுது, அந்தக் கல்லூரி எங்கேயுள்ளது, எவ்வளவு தொலையில் உள்ளது, அங்கு எங்ங்னஞ் சேர்வது என்ற செய்திகளைப் பற்றிய எண்ணமே அவருக்கில்லை. ஆனால், "ஹேம்புடன் போகாமலிருப்பேனா? போயே தீர்வேன்!" என்று அவர்